PHOTOS

Train Accident: கடந்த 13 நாட்களில் 8 ரயில் விபத்துகள்.. தொடரும் உயிர் பலிகள்!

nts: இந்த மாதத்தில் (July 2024) தொடர்ந்து ரயில் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், பயணிகள் இட...

Advertisement
1/9
13 நாட்களில் 8 ரயில் விபத்துகள்
13 நாட்களில் 8 ரயில் விபத்துகள்

இந்த மாதத்தில் நடந்த ரயில் விபத்துகள் குறித்து பார்ப்போம். (Image Credit: ANI / IANS / PTI / Social Media)

2/9
30 ஜூலை: ஜார்க்கண்டில் ரயில் விபத்து
30 ஜூலை: ஜார்க்கண்டில் ரயில் விபத்து

ஜூலை 30: (செவ்வாய்க்கிழமை) ஜார்க்கண்டில் அதிகாலையில் ஹவுரா-மும்பை மெயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர். மும்பை நோக்கிச் சென்ற ரயில், சக்ரதர்பூர் அருகே, ராஜ்கர்ஸ்வான் வெஸ்ட் அவுட்டர் மற்றும் பாரபாம்பூ இடையே, சக்ரதர்பூர் பிரிவில் அதிகாலை 3:45 மணியளவில் தடம் புரண்டது.

3/9
29 ஜூலை: பீகார் சம்பர்க் கிராந்தி ரயில் விபத்து
29 ஜூலை: பீகார் சம்பர்க் கிராந்தி ரயில் விபத்து

பீகார் தர்பங்காவிலிருந்து புதுடெல்லி செல்லும் பீகார் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் இன்ஜினில் இருந்து  இரண்டு துண்டாக பிரிந்தது. ஆனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

4/9
ஜூலை 26: புவனேஸ்வரி
ஜூலை 26: புவனேஸ்வரி

ஜூலை 26 (வெள்ளிக்கிழமை) அன்று புவனேஸ்வரில் உள்ள மஞ்சேஸ்வர் ஸ்டேஷன் யார்டில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

5/9
21 ஜூலை: அல்வார், ராஜஸ்தான்
21 ஜூலை: அல்வார், ராஜஸ்தான்

21 ஜூலை (சனிக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள திஜாரா கேட் அருகே சரக்கு ரயில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. உயிர் சேதம் இல்லை.

6/9
21 ஜூலை: வங்காளம் Goods
21 ஜூலை: வங்காளம் Goods

21 ஜூலை (ஞாயிற்றுக்கிழமை ) அன்று மாலை 6 மணியளவில் மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது. உயிர் சேதம் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

7/9
ஜூலை 20: மேற்கு உ.பி.யின் அம்ரோஹா
ஜூலை 20: மேற்கு உ.பி.யின் அம்ரோஹா

ஜூலை 20 (சனிக்கிழமை ) அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹா ரயில் நிலையத்திற்கு அருகில் மாலை சரக்கு ரயில் தடம் புரண்டது. உயிர் சேதம் இல்லை.

8/9
ஜூலை 19: வல்சாத், குஜராத்
ஜூலை 19: வல்சாத், குஜராத்

ஜூலை 19 (வெள்ளிக்கிழமை) குஜராத்தில் வல்சாத் மற்றும் சூரத் ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் வேகன் தடம் புரண்டு ரயில் விபத்து 

9/9
ஜூலை 18: உ.பி., கோண்டாவில் ரயில் விபத்து
ஜூலை 18: உ.பி., கோண்டாவில் ரயில் விபத்து

ஜூலை 18 (வியாழக்கிழமை) அன்று உத்தரபிரதேசத்தில் கோண்டா அருகே சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது நான்கு பேர் பலியாகினர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். 





Read More