PHOTOS

தன்னை விட 27 வயது குறைந்த நாயகிக்கு ஜோடியாகும் விஜய்?! அவர் யார் தெரியுமா?

69 : நடிகர் விஜய், தன்னை விட மிக இளம் வயது கதாநாயகி ஒருவருடன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வ...

Advertisement
1/8
Thalapathy 69
Thalapathy 69

கோலிவுட்டில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் நடிகராக விளங்குபவர், நடிகர் விஜய். எத்தனையோ ஹிட் படங்களில் நடித்து கொடுத்த இவர், தான் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும், இதனால் கடைசி படத்தில் நடித்து கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து விலகுவதாகவும் கூறினார். 

2/8
Thalapathy 69
Thalapathy 69

தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியை ஆரம்பித்த போதே தனது சினிமாவிற்கு விரைவில் முழுக்கு போட இருப்பதை கூறிய விஜய், தான் கடைசியாக கமிட்டான படத்தில் நடித்து கொடுத்துவிட்டு திரையுலகில் இருந்து விலகுவதாகவும் கூறினார். தற்போது GOAT படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அவர், அடுத்து அவரது 69வது படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

3/8
Mamitha Baiju Vijay
Mamitha Baiju Vijay

தளபதி 69 படத்தை ஹெச்.வினோத் இயக்கும் நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாவில்லை. சமீபத்தில் இப்படத்திற்கான லுக் டெஸ்ட் பணிகள் நடைப்பெற்றதாகவும் இதில் சமந்தா கலந்து கொண்டதாகவும் குறப்பட்டது. இதனால், அவர்தான் இந்த படத்தில் ஹீரோயினாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது சினிமா வட்டார்ங்களில் கிசுகிசுப்பதன்படி, மலையாள நடிகையான மமிதா பைஜு இதற்கு தேர்வாகியிருப்பதாக கூறப்படுகிறது. 

4/8
Mamitha Baiju Vijay
Mamitha Baiju Vijay

மலையாள ரசிகர்கள் மட்டுமன்றி, தமிழிலும் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகை மமிதா பைஜு. சூப்பர் சரண்யா படம் மூலம் அறிமுகமான இவர், சமீபத்தில் வெளியான பிரேமலு படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். 

5/8
Mamitha Baiju Vijay
Mamitha Baiju Vijay

மமிதா, தமிழிலும் ரெபல் படத்தில் நடித்திருக்கிறார். வணங்கான் படத்தில் கமிட்டாகி சூர்யாவுடன் சில நாட்கள் நடித்த இவர், பின்னர் அதிலிருந்து விலகிக்கொண்டார். பிரேமலு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சென்சேஷனல் கதாநாயகியாக மாறி தற்போது பல இயக்குநர்களின் அடுத்த பட நாயகியாக இருக்கிறார். 

6/8
Mamitha Baiju
Mamitha Baiju

தளபதி 69 படத்தில் மமிதா நடிக்க இருக்கும் தகவல், இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறாரா? அல்லது வேறு ஏதேனும் முக்கிய கதாப்பாத்திரமா? என்பது குறித்து ரசிகர்கள் வினவி வருகின்றனர். 

7/8
Mamitha Baiju
Mamitha Baiju

தற்போதைய தகவலின் படி, மமிதா விஜய்க்கு ஜோடியாகத்தான் தளபதி 69 படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர்களின் வயது வித்தியாசம் குறித்தும் பெரிதாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. 

8/8
Mamitha Baiju
Mamitha Baiju

மமிதாவிற்கு வயது, 23. விஜய்க்கு வயது, 50 ஆகிறது. இவர், தன்னை விட 27 வயது இளைய நடிகையுடன் நடிக்க ஒப்பு கொள்வாரா என்பதும், இவர்களின் ஜோடிப்பொருத்தம் படத்தில் எப்படி இருக்கும் என்பதும் நெட்டிசன்களின் விவாதங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது. 





Read More