PHOTOS

குரோதி நவராத்திரி எப்போது தொடங்குகிற்து? அன்னை துர்க்கைக்கு ஆயுதங்கள் கிடைத்த கதை!

ttasi : ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை அடுத்த நாள் முத...

Advertisement
1/9
அசுரர்கள்
அசுரர்கள்

புராணங்களின் படி சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்ற ஆணவத்தில் மக்களை வதைத்தனர் அரக்கர்களைக் கண்டு அஞ்சி நடுங்கிய மக்கள் முத்தேவர்களிடம் முறையிட்டனர்  

 

2/9
முத்தேவர்கள்
முத்தேவர்கள்

அரக்கர்களை அழிக்க ஆலோசித்த முத்தேவர்களும், எந்த ஆணாலும் சும்ப நிசும்பர்களை வெல்ல முடியாது என்ற வரம் பெற்ற அசுரர்களை அழிக்க பிரம்மா விஷ்ணு சிவன் மூவரும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

3/9
அன்னை ஆதி சக்தி
 அன்னை ஆதி சக்தி

மக்களின் துன்பம் கண்டு சகியாத சக்தி அன்னை மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலையானார்கள். 

 

4/9
ஆயுதங்கள்
ஆயுதங்கள்

முத்தேவர்களின் சக்தியைப் பெற்ற அன்னை ஆதிசக்தி, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரின் ஆயுதங்களையும் பெற்றார்.  

5/9

ஆண் தெய்வங்கள் எல்லாம் சக்தியை, அன்னையிடம் அளித்துவிட்டு, சிலையாய் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. 

6/9
அரக்கர்கள் சம்ஹாரம்
அரக்கர்கள் சம்ஹாரம்

அனைத்து தெய்வங்களின் ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்ட அன்னை பராசக்த்தி சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்தார்

7/9
நவராத்திரி போர்
நவராத்திரி போர்

ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்ததால் தான் அந்த 9 நாட்களும் நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது

 

8/9
விஜயதசமி
விஜயதசமி

ஒன்பது நாள் போருக்கு பிறகு அன்னை வெற்றி பெற்ற தினம் விஜயதசமி நாள் ஆகும்

9/9
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

 





Read More