PHOTOS

ஆதார் அட்டை மூலம் வங்கி இருப்பை சரிபார்க்கும் முறை!

ார் அட்டை என்பது அனைவருக்கும் இன்றியமையாத அடையாள ஆவணமாகும். வங்கிச் சேவைகளிலிருந்து அரசின் திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் அட்ட...

Advertisement
1/5
வங்கி இருப்பை சரிபார்க்கும் முறை
வங்கி இருப்பை சரிபார்க்கும் முறை

ஆதார் அட்டை மூலம் வங்கி இருப்பை சரிபார்க்கும் முறை: தங்கள் ஆதார் அட்டைகளை தங்கள் வங்கி மற்றும் மொபைல் எண்களுடன் இணைக்க வேண்டும் என UIDAI கூறுகிறது. இந்த சேவையை இணைய இணைப்பு இல்லாமலும் பயன்படுத்தலாம். மூத்த குடிமக்கள், ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கிளைக்குச் செல்லாமல் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தங்கள் வங்கி விவரங்களைச் சரிபார்க்கலாம்.

2/5
மொபைல் எண்
 மொபைல் எண்

முதலில், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து *99*99*1# டயல் செய்யுங்கள்.

3/5
12 இலக்க ஆதார் எண்
12 இலக்க ஆதார் எண்

ஆதார் அட்டையுடன் உங்கள் வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்க்க, *99*99*1# டயல் செய்த பிறகு 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

4/5
வங்கிக் கணக்கு
வங்கிக் கணக்கு

உங்கள் ஆதார் எண்ணை மீண்டும் உள்ளிட்டு, ஆதார் அட்டையுடன் உங்கள் வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்க்கலாம்

5/5
UIDAI அனுப்பும் SMS
UIDAI அனுப்பும் SMS

UIDAI அனுப்பும் SMS : திரையில் வங்கி இருப்புடன் UIDAI இடமிருந்து பெறப்பட்ட ஃபிளாஷ் SMS உங்கள் போனிற்கு வரும். ஆதார் அட்டை வைத்திருப்பவர் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்ப்பது மட்டுமல்லாமல், பணம் அனுப்புதல், அரசாங்க மானியங்களுக்கு விண்ணப்பித்தல் அல்லது ஆதார் அட்டையின் உதவியுடன் பான் கார்டுக்கு விண்ணப்பித்தல் போன்ற பிற செயல்பாடுகளையும் செய்யலாம்.





Read More