PHOTOS

'கல்கி 2898 AD' படத்தின் தீம் மியூசிக்கை இசை நிகழ்ச்சியில் வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்!

பிரபாஸின் 'கல்கி 2898 AD' படத்தின்  பின்னணி இசையின் சிறு கோர்வை , ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக அரங்கேற்றமாகியுள்ளது.

...
Advertisement
1/5

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், நடிப்பில். இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்தியா சினிமா உலகமே  எதிர்பார்த்து காத்திருக்கும் 'கல்கி 2898 AD' படத்தின் தீம் இசை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக அரங்கேற்றப்பட்டுள்ளது. 

2/5

சென்னையில் நடைபெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் “நீயே ஒளி” இசை நிகழ்ச்சியில், ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக,  'கல்கி 2898 AD'  படத்தின் தீம் இசைக்கோர்வை  அரங்கேற்றப்பட்டது. எதிர்பாராத இந்த சர்ப்ரைஸால், ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். 

3/5

இதனைத்தொடர்ந்து தற்போது இணையத்தில் இந்த தகவல் வைரலாக பரவ, ரசிகர்கள், அந்த தீம்  இசையின் முழு வடிவத்தை வெளியிடுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர். 

4/5

இந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம்,  எதிர்காலத்தில் நிகழும் ஃபேண்டஸி திரை அனுபவமாக உருவாகி வருகிறது. 

5/5

இப்படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் லுக் கிளிம்ப்ஸ்  இப்படம் ஒரு அசாதாரணமான சினிமா அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்கும் என உறுதியளித்தது. இப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.





Read More