PHOTOS

ஐபிஎல் 2024: ஷமி முதல் ப்ரூக் வரை ஐபிஎல்லில் இருந்து விலகிய 7 நட்சத்திர வீரர்கள்

024: மார்ச் 22 ஆம் தேதி ஐபிஎல் தொடங்க இருக்கும் நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருக்கும் 7 நட்சத்திர வ...

Advertisement
1/7

முகமது ஷமி:

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது ஷமி ஐபிஎல் 2024 மற்றும் டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளார். இதை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார். 2023 உலகக் கோப்பையின்போது காயம் அடைந்த முகமது ஷமி வலி ஊசியை எடுத்துக் கொண்டு அந்த தொடர் முழுவதும் விளையாடினார். இப்போது அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருக்கும் அவர் இன்னும் மூன்று மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாது. ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் அவர் உள்ளார்.

2/7

ஹாரி புரூக்:

வழக்கம்போல கடந்த ஐபிஎல் சீசனும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மோசமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு சீசன் தொடங்குவதற்கு முன்பே அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணி நம்பி வாங்கிய அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரை 4 கோடி ரூபாய்க்கு ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி வாங்கியிருந்தது.

3/7

மார்க் வுட்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாட இருந்த மார்க் வுட் கடைசி நேரத்தில் ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜூன் மாதம் உலக கோப்பை நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்னுரிமை அளிக்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

4/7

பிரசித் கிருஷ்ணா:

பிரசித் கிருஷ்ணா கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. காயம் காரணமாக விலகியிருந்த அவர், இந்த ஆண்டும் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாக காயமடைந்து ஐபிஎல் 2024 சீசனில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார். பிரசித் கிருஷ்ணா ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ளார்.

5/7

ஜேசன் ராய் விலகல்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ஜேசன் ராய் மற்றும் கஸ் அட்கிசன் ஆகியோர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர். ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார் என்றாலும் கஸ் அட்கிசன் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அடுத்து வரும் 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்னுரிமை அளித்து ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருக்கிறார். இருவருக்கும் மாற்றாக கேகேஆர் அணி பில் சால்ட் மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோரை தேர்வு செய்துள்ளது.

6/7

டெவோன் கான்வே:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டெவோன் கான்வே காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருக்கிறார். அவரின் விலகல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கான்வேவுக்கு மாற்று வீரர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

7/7

சூர்யகுமார் யாதவ்:

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் காயத்திற்காக சிகிச்சையில் இருக்கிறார். முழுமையாக குணமடையாமல் இருக்கும் அவர், ஐபிஎல் தொடரில் முதல் ஒரு சில போட்டிகளில் ஆடமாட்டார் என கூறப்படுகிறது. இருப்பினும் ஐபிஎல் தொடரின் பிற்பகுதியில் அவர் மும்பை அணியுடன் இணைந்துவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.





Read More