PHOTOS

அடிச்சுத் தூக்கப்போகும் மழை... 2 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு; முழு வானிலை அப்டேட்

News: தமிழகத்தின் இந்த இரண்டு மாவட்டங்களில் மிக கன முதல் அதி கனமழை என சென்னை வானிலை ஆய்வு ...

Advertisement
1/8
மழை அப்டேட்
மழை அப்டேட்

இன்று முதல் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டது. அதன் விவரங்களை இங்கு காணலாம். 

 

2/8
மழை அப்டேட்
மழை அப்டேட்

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (ஜூலை 18) நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (ஜூலை 19) அன்று காலை 5.30  மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வழுபெற்றது.

 

3/8
மழை அப்டேட்
மழை அப்டேட்

தற்போது இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுபெற்று, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை (ஜூலை 20) அதிகாலை ஒரிசா கடற்கரையை பூரிக்கு அருகில் கடக்கக் கூடும்.

 

4/8
மழை அப்டேட்
மழை அப்டேட்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று (ஜூலை 19) பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

 

5/8
மழை அப்டேட்
மழை அப்டேட்

இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன முதல் அதி கனமழையும்; கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. (புகைப்படம் - Twitter/@ChennaiRMC)

 

6/8
மழை அப்டேட்
மழை அப்டேட்

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை நாளை (ஜூலை 20) பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். (புகைப்படம் - Twitter/@ChennaiRMC)

 

 

7/8
மழை அப்டேட்
மழை அப்டேட்

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

8/8
மழை அப்டேட்
மழை அப்டேட்

மேலும் நாளை மறுநாள் (ஜூலை 21) முதல் ஜூலை 25ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





Read More