PHOTOS

எல்லா நாளும் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு 7 நாளில் உடல் எடையை குறைக்க டிப்ஸ்

குறைக்க வேண்டும் என ஆசைப்பட்டாலும் எல்லா நாளும் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் போதிய நேரமிருக்காது. ஆனால் அவர்கள் வெறும் ஏழு நாட்களில் உட...

Advertisement
1/8

முதல் நாள் -

உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்பினால் முதல் நாளில் காய்கறிகள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் தினசரி கவனம் செலுத்த வேண்டும். உட்கார்ந்து வேலை செய்தாலும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் குடிப்பதை மறந்துவிடாதீர்கள்.

2/8

இரண்டாம் நாள் -

காலை உணவு மற்றும் சிற்றுண்டி உணவுகளின் பட்டியலை இரண்டாம் நாளில் மாற்றிக் கொள்ளுங்கள். தயிர் போன்ற உயர் புரத உணவுகளை தேர்வு செய்யவும். பழங்கள், நட்ஸ் ஆகியவற்றை டையட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதாவது குறைவான உணவு எடுத்துக் கொள்ளும் வகையில், பசியை தடுக்கும் ஆரோக்கிய உணவுகளாக டையட்டில் இருக்க வேண்டும். சர்க்கரை சார்ந்த எந்த பண்டங்களும் உணவுப் பட்டியலில் இருக்கக்கூடாது.

3/8

மூன்றாம் நாள் - 

உங்கள் உயரத்துக்கு ஏற்ப தண்ணீர் குடிக்கிறீர்களா என உறுதி செய்ய வேண்டும். இரண்டு நாளும் அப்படி குடிக்கவில்லை என தெரிந்தால் மூன்றாவது நாளில் போதுமான தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

4/8

நான்காம் நாள் -

உட்கார்ந்தே வேலை செய்பவர்களாக இருந்தால், அதிகநேரம் நாற்காலியில் உட்கார்ந்திருக்காதீர்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து நிற்கவும், சில நிமிடங்கள் நடந்து ரிலாக்ஸ் செய்யவும்.

5/8

ஐந்தாம் நாள் -

உணவில் அதிக புரதங்கள் கொண்ட சூப்களை சேர்த்துக் கொள்ளுங்கள். வெளியில் சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகளை சாப்பிட வேண்டாம். வீட்டிற்கு வாங்கி வந்து உடலுக்கு தேவையான புரதம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சமைத்து சமச்சீர் அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

6/8

ஆறாம்  நாள் -

மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளில் கவனம் செலுத்துங்கள். சுவாசப் பயிற்சிகள், யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை செய்யவும். இதனை தினசரி பயிற்சியாக மேற்கொள்வதை உறுதிபடுத்துங்கள்.

7/8

ஏழாவது நாள் -

உங்களை மேலும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள நீண்ட தூரம் நடைபயணம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடலுக்கு அதிக செயல்பாடுகளை கொடுக்கும் பயிற்சியில் ஈடுபடவும். ஆரோக்கியமான உணவுகளை தயார் செய்து அவற்றை சிற்றுண்டிகளாக பிரித்து சாப்பிடுங்கள். 

8/8

இந்த செயல்முறை தொடங்கிய நாளில் இருந்து இப்போது இருக்கும் உடல் எடையை கணக்கிட்டு பாருங்கள். நிச்சயம் வித்தியாசம் இருக்கும். அதனை தொடரும்பட்சத்தில் உங்களின் உடல் எடை விரைவில் குறைந்து ஸ்லிம்மாக மாறுவீர்கள்.





Read More