PHOTOS

உங்களுக்குள் இருக்கும் சூப்பர்மேனை ஆக்டிவேட் செய்வது எப்படி?

்குள் இருக்கும் சூப்பர் மேனை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பதற்கான...

Advertisement
1/7

காலை நேரத்தில் காபி, டீ குடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். எழுந்ததும் ஒரு சொம்பு தண்ணீரை குடித்துவிடுங்கள். நாள் முழுவதும் குறிபிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

2/7

மிக முக்கியமாக காலை நேரத்தில் தியானம் செய்ய வேண்டும். உடற்பயிற்சியை முடித்தவுடன் தினமும் காலையில் 15 நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள். அப்போது மனதை ஒரு நிலைப்படுத்தி கவனம் கொடுக்க வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். 

3/7

காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் உணவை பிரித்து ஊட்டச்சத்துக்கு மிக்க உணவுகளை சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இரவு நேரத்தில் கடினமான உணவுகளை சாப்பிட வேண்டாம். 

4/7

தினமும் ஆடைகளை விதவிதமாகவும், மேட்சிங்காகவும் அணியுங்கள். உங்களை நீங்கள் மிகவும் அழகாக வெளிப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் மீதான தன்னம்பிக்கை வளரும். 

5/7

குறைவாக பேசுங்கள். சத்தமாக பேசாதீர்கள். வாக்குவாதங்களை தவிர்த்துவிட்டு அமைதியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். இவையெல்லாம் உங்களின் மேனரிசத்தை வளர்க்கும்.

6/7

பேசும் வார்த்தைகளை தெளிவாகவும், சுருக்கமாகவும் பேச பழகிக் கொள்ளுங்கள். என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவாக சுருக்கமாக சொல்லும்போது, உங்கள் மீது மதிப்பு கூடும். 

7/7

தினசரி அரைமணி நேரமாவது புதிய விஷயங்கள் குறித்து படிக்கவும். அவற்றை உங்கள்  வாழ்க்கை முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அடிக்கடி பயணம் செய்யுங்கள். புதிய மனிதர்களை சந்திக்கவும். 





Read More