PHOTOS

ரூ. 6,601 கோடியுடன் பாஜக முதலிடம்... திமுக, அதிமுகவுக்கு எத்தனையாவது இடம்? - தேர்தல் பத்திரம் டேட்டா

ங்கிய தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட்டது. அந்த வகையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்ட...

Advertisement
1/7
தேர்தல் பத்திரம்
தேர்தல் பத்திரம்

ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி ரூ. 1 கோடியும், மகாராஷ்டிராவின் சிவசேனா (உத்தவ் தாக்ரே) ரூ.1 கோடியும், தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.1 கோடியும் பெற்றுள்ளன. முக்கிய கட்சிகளில் இவை குறைந்த நிதியை மட்டுமே தேர்தல் பத்திரம் மூலம் திரட்டியுள்ளனர். 

 

2/7
தேர்தல் பத்திரம்
தேர்தல் பத்திரம்

தமிழ்நாட்டில் பெரிய கட்சியான அதிமுகவும் ரூ.6 கோடியை மட்டுமே தேர்தல் பத்திரம் மூலம் திரட்டியுள்ளனர். பஞ்சாபின் சிரோண்மணி அதாளி தளம் ரூ.7 கோடியை பெற்றுள்ளது. ஜார்க்கண்டின் முக்தி மோர்ச்சா, பீகாரின் ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி ஆகியவை ரூ.14 கோடியை பெற்றுள்ளன.

 

3/7
தேர்தல் பத்திரம்
தேர்தல் பத்திரம்

நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ரூ.21 கோடியும், நாடாளுமன்றத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.31 கோடியும் வசூலித்துள்ளன.

 

4/7
தேர்தல் பத்திரம்
தேர்தல் பத்திரம்

மதச்சார்பற்ற ஜனதா தளம் ரூ.44 கோடியும், ஆம் ஆத்மி கட்சி ரூ.65 கோடியும், ராஷ்டிரிய ஜனதா தளம் ரூ.73 கோடியும், சிவசேனா (ஏக்னாத் சிண்டே) ரூ.158 கோடியும், தெலுங்கு தேச கட்சி ரூ.219 கோடியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.337 கோடியும் வசூலித்துள்ளனர். 

 

5/7
தேர்தல் பத்திரம்
தேர்தல் பத்திரம்

திமுக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.639 கோடியும், பிஜூ ஜனதா தளம் ரூ.776 கோடியும், பாரத் ராஷ்டிரிய சமிதி ரூ. 1,215 கோடியும் பெற்றுள்ளன. 

 

6/7
தேர்தல் பத்திரம்
தேர்தல் பத்திரம்

அகில இந்திய காங்கிரஸ் ரூ.1,422 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,610 கோடியும், பாஜக ரூ.6,601 கோடியும் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

7/7
தேர்தல் பத்திரம்
தேர்தல் பத்திரம்

ஒட்டுமொத்தமாக வசூலிக்கப்பட்ட 12 ஆயிரத்து 769 கோடி ரூபாயில் பாஜக மட்டும் 6,601 கோடி ரூபாயை பெற்றிருக்கிறது. அதாவது, 47.46% நிதியை பாஜக மட்டும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 





Read More