PHOTOS

வாயுப் பிரச்னையில் இருந்து விடுபட இந்த வீட்டு வைத்தியங்கள் முயற்சிக்கவும்

ைகளில் ஒன்று வாயு தொல்லை ஆகும். வயிற்றில் வாயு உருவாக்கம் செரிமான செயல்முறையை பகுதிக்கும். புளிப்பு, காரமான போன்ற உணவுகளை அதிகம் உண்பது...

Advertisement
1/8
இளநீர்
இளநீர்

வயிற்றில் வாயு தொந்தரவு இருந்தால், இளநீரைக் குடிப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம். இளநீர் அஜீரணத்தை போக்கி வாயு மற்றும் அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் தரும் மருத்துவ குணங்கள் கொண்டது.

2/8
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை உட்கொள்வதால் வாயு பிரச்சனை நீங்கும். வாயு பிரச்சனையில் நிவாரணம் பெற இலவங்கப்பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்கலாம்.

3/8
புதினா
புதினா

வாயு பிரச்சனையால் நீங்கள் மிகவும் சிரமப்பட்டால், புதினா இலையில் தேநீர் தயாரித்து குடிப்பது நிவாரணம் அளிக்கும். இது வாயுவினால் ஏற்படும் வயிற்று வலியிலிருந்தும் நிவாரணம் தர உதவுகிறது.

4/8
ஓமம்
ஓமம்

ஓமம் விதைகளில் தைமால் என்ற கலவை உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது. வாயு பிரச்சனை இருந்தால், அரை டீஸ்பூன் ஓமம் விதைகளை தண்ணீருடன் குடிக்கலாம்.

5/8
இஞ்சி
இஞ்சி

இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதன் மீது உப்பு தூவி, சாப்பிடலாம். இதனால் வாயுத் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள், பசியும் அதிகரிக்கும். வாயு பிரச்சனைகளில் இருந்து விடுபட இது ஒரு சிறந்த வழியாகும்.

6/8
கிராம்பு
கிராம்பு

கிராம்பு வாயு பிரச்சனையை நீக்க உதவும். மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுப்பட தேனுடன் கிராம்பை  சாப்பிட்டு வர குணமாகும். கிராம்பு எண்ணெய் செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுகிறது.

7/8
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை

வாயு பிரச்சனைகளுக்கு சீரக நீர் சிறந்த வீட்டு வைத்தியம். சீரகத்தில் அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன, இது உமிழ்நீர் சுரப்பிகளைத் தூண்டுகிறது. இதனால் உணவு சரியாக ஜீரணமாகும். வயிற்றில் அதிகப்படியான வாயு உருவாவதையும் தடுக்க உதவுகிறது.

8/8
பெருஞ்சீரகம்
பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம் விதைகள் வயிற்று வலியைப் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்த உதவும்.





Read More