PHOTOS

ஆகஸ்டு 15ஆம் தேதி வெளியாகும் 4 முக்கிய திரைப்படங்கள்! முழு லிஸ்டை பாருங்க..

On August 15 2024: ஆகஸ்டு மாதம் பல தமிழ் படங்கள் வெளியாகின்றன. குறிப்பாக ஆகஸ்டு 15ஆம் தேதியன்று 4 முக்கிய திரைப்படங்கள் தியேட...

Advertisement
1/9
August 15 Movies
August 15 Movies

ஆகஸ்டு 15ஆம் தேதி வெளியாகும் படங்கள்:

வரும் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு தமிழ் படங்கள் வெளியாகின்றன. அதில் அனைத்தும் மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களாக இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். 

2/9
Thanglaan
Thanglaan

தங்கலான்:

விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், தங்கலான். இந்த படத்தை பா.இரஞ்சித் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம், வரும் ஆகஸ்டு 15ஆம் தேதி வெளியாகிறது. 

3/9
Thangalaan
Thangalaan

இந்த படம், 2024ஆம்ஆண்டின் மார்ச் மாதத்திலேயே வெளியாக இருந்தது. ஆனால், சில பணிகள் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. 

4/9
Raghu Thatha
Raghu Thatha

ரகு தாத்தா:

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், ரகு தாத்தா. இதில் அவருடன் சேர்ந்து எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் ரவிந்திரநாத், ரவிந்திர விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

5/9
Raghu Thaatha
Raghu Thaatha

ரகு தாத்தா படத்தை சுமன் குமார் இயக்கியிருக்கிறார். இதில் கீர்த்தி, கயல்விழி எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஆகஸ்டு 15ஆம் தேதி திரையரங்குகளில் பார்க்கலாம். 

6/9
Demonte Colony 2
Demonte Colony 2

டிமான்டி காலனி2: 

2015ஆம் ஆண்டு வெளியாகி பலரை அலற விட்ட திரைப்படம், டிமாண்டி காலனி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியிருக்கிறது. இதிலும், அருள்நிதிதான் ஹீரோவாக நடிக்கிறார். அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தை ஆகஸ்டு 15ஆம் தேதி முதல் திரையரங்குகளில் பார்க்கலாம். 

7/9
Demonte Colony 2
Demonte Colony 2

டிமாண்டி காலனி 2 படத்தில் அருள்நிதி உடன் சேர்ந்து பிரியா பவானி சங்கர், பிக்பாஸ் அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். 

8/9
Andhagan
Andhagan

அந்தகன்:

இந்தியில் பெரிய ஹிட் அடித்த படங்களுள் ஒன்று, அந்தாதுன். இந்த படத்தின் தமிழ் ரீ-மேக்தான் அந்தகன். இதில், பிரசாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருக்கிறார். மிஸ்டரி-காமெடி-த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் வில்லியாக வருகிறார் சிம்ரன். இந்த படத்தின் ரிலீஸ் பல ஆண்டுகளாக தள்ளிப்போனதை அடுத்து, ஒரு வழியாக ஆகஸ்டு 15ஆம் தேதியன்று இப்படம் வெளியாகிறது. 

9/9
Andhagan Album
Andhagan Album

அந்தகன் ஆல்பம்:

GOAT படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த் நடித்து வருவதை தொடர்ந்து, அந்தகன் படத்தின் ஆல்ப பாடலை விஜய் சமீபத்தில் ரிலீஸ் செய்தார்.





Read More