PHOTOS

சுகர் நோயாளிகளுக்கு ஏற்ற பழங்கள் இவைதான்: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும்

அவசர வாழ்க்கையில், அனைவரும் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள், சிறியவர்கள் என யாராக இருந்தாலும் சரி, அனை...

Advertisement
1/10
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்க்கு பல காரணங்கள் உள்ளன. பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது தவிர, இன்றைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாத நிலை, உடல் பருமன் போன்ற பல காரணங்கள் சர்க்கரை நோய் வருவதற்குக் காரணமாகின்றன.

2/10
சுகர் லெவல்
சுகர் லெவல்

ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதை பூரணமாக குணமாக்க முடியாது. எனினும், சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை பின்பற்றினால், இந்த நோயை கட்டுக்குள் வைக்கலாம்.  

3/10
நீரிழிவு நோயாளிகள்
நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். ஆனால், உடலுக்கு பல வித ஊட்டச்சத்துகளை அளிக்கும் உணவுகளையும் உட்கொள்ள வேண்டியது மிக அவசியம். 

4/10
பழங்கள்
பழங்கள்

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்ற அச்சத்தால், பழங்களைச் சாப்பிடுவதில்லை. ஆனால் நீரிழிவு நோயாளிகளும் பழங்களை சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சில பழங்கள் அவர்களுக்கு உதவியாக இருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

5/10
பெர்ரி
பெர்ரி

பெர்ரி பழங்கள்: பெர்ரிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன., இவை இரண்டும் சர்க்கரையை குறைக்க நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். புளுபெர்ரி, ஸ்ட்ராபெரி, ராஸ்பெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்ற அனைத்து வகையான பெர்ரிகளும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லவையாக கருதப்படுகின்றன. இதில் கலோரிகளும் மிகக் குறைவு. மேலும், நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் நிறைந்துள்ளன. 

6/10
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது தவிர, சிட்ரஸ் பழங்களில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்சிட்டெண்டுகளும்  உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அவற்றில் மிகக் குறைந்த அளவு சர்க்கரை இருப்பதாக கூறப்படுகின்றது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும். சுகர் நோயாளிகள் இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

7/10
அவகேடோ
அவகேடோ

அவகேடோ: அவகேடோ பழத்தில் வைட்டமின்கள் சி, ஈ, கே மற்றும் பி நிறைந்துள்ளன. இந்த பழம் பல வகையான உடல்நல பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. இவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால், உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகின்றது. இதனால் இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். 

8/10
கிவி
கிவி

கிவி: கிவி பழத்தில், வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நம் உடலுக்குத் தேவையான பல வித ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கிவியை உட்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கும் நல்லதாக கருதப்படுகின்றது. கிவி எலும்புகளை ஆரோக்கியமாக இருக்க வைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். 100 கிராம் கிவி பழத்தில் 9 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளது. அதனால் அவற்றை உண்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதாக கூறப்படுகிறது.

9/10
ஆப்பிள்
ஆப்பிள்

ஆப்பிள்: ஆப்பிளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஆப்பிள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது. ஆப்பிளில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. 

10/10
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.





Read More