PHOTOS

தினமும் 1 பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் 7 நலன்கள்! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..

lic : பூண்டு உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் உணவு பொருட்களுள் ஒன்றாக இருக்கிறது. இதை, தினமும் ஒன்று சாப்பிடுவதால் உடலுக்கு என...

Advertisement
1/8
Garlic
Garlic

இந்திய சமையலறைகளுள், மிகவும் முக்கியமான உணவு பொருளாக இருப்பது பூண்டு. இதை காரமான அசைவ உணவுகளில் இருந்து, சாதாரண சாம்பார் வரை அனைத்து உணவுகளிலும் பூண்டு உபயோகிக்கப்படுகிறது. 

2/8
Garlic Tea
Garlic Tea

பூண்டு சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. இதனை சமையலில் மட்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. டீயாகவும் குடிக்கலாம். 

3/8
Garlic Benefits
Garlic Benefits

பூண்டில் இருக்கும் அற்புதமான நன்மைகளை வரிசையாக பார்க்கலாம்!

4/8
Immunity Booster
Immunity Booster

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

பூண்டில், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இதில் வைட்டமின்கள் சி மற்றும் பி6, மாங்கனீஸ் மற்றும் செலினியம் ஆகியவை நிறைந்திருக்கின்றன. சளி மற்றும் காய்ச்சலை குறைக்க இதனை தினமும் ஒரு பல் சாப்பிடலாம். 

5/8
Detox
Detox

டீடாக்ஸ்:

பூண்டு, உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றி உடலை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது. கல்லீரலையும் சுத்தப்படுத்துகிறது. 

6/8
Cholesterol
Cholesterol

கொழுப்பு:

பச்சை பூண்டை, வெறும் வயிற்றில் ஒன்று சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு என்று சொல்லப்படும் LDL கொழுப்பு குறையும். அதே போல நல்ல கொழுப்பு எனப்படும் HDL கொழுப்பை அதிகரைக்க உதவும்.

7/8
Blood Pressure
Blood Pressure

ரத்த அழுத்தம்:

ஹைபர் டென்சன்  உள்ளிட்ட பிரச்சனைகளை குறைக்க பூண்டை சேர்த்து கொள்ளலாம். இதனால், உடலில் ரத்த அழுத்தம் குறையும். இது, உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்தம் செல்ல உதவும்.

8/8
Antibiotics
Antibiotics

பூண்டு, பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து மீள உதவுகிறது. ஏற்கனவே உடலில் தாக்கிய நோய் பாதிப்புகளையும் இது குறைக்க உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)





Read More