PHOTOS

நரம்பு தளர்ச்சி முதல் உடல் பருமன் வரை... வியக்க வைக்கும் முருங்கை...!

முருங்கை  என்னும் அதிசய உணவின் அருமை பெருமையை உணர்ந்த நமது பெரியவர்கள், முருங்கையை நொறுங்க தின்றால் 3000 வராது என்று கூறுவார்கள். ...

Advertisement
1/8
முருங்கை
முருங்கை

முருங்கையில், வைட்டமின்கள் (ஏ, சி மற்றும் ஈ), தாதுக்கள் (கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு) மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களின்  களஞ்சியம். முருங்கையில் குர்செடின், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன

2/8
நரம்பு மண்டலம்
நரம்பு மண்டலம்

நரம்பு மண்டலம்: நரம்பு தளர்ச்சி நீங்க முருங்கை வேர் மிகவும் உதவும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். முருங்கை வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு, சிறிதளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். 

3/8
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்: முருங்கை இலையில் உள்ள இன்சுலின் போன்ற ஒரு பொருள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இது தவிர, முருங்கைக்காயில் உள்ள நார்ச்சத்து, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

4/8
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்: முருங்கையில் காணப்படும் குர்செடின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும், இதில் உள்ள பொட்டாசியம் தமனிகளில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் இதயத் துடிப்பையும் சீராக்குகிறது.

 

5/8
உடல் பருமன்
உடல் பருமன்

உடல் பருமன்: முருங்கைக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது தவிர, முருங்கையில் காணப்படும் குளோரோபில் உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.

6/8
கொலஸ்ட்ரால்
கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால்: முருங்கைக்காயில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன இரத்தத்தில் உள்ள எல்டிஎல் என்னு கெட்ட கொழுப்பின்  அளவைக் குறைக்க உதவுகிறது. இதன் காரணமாக பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயம் குறைக்கிறது.

7/8
மலச்சிக்கல்
மலச்சிக்கல்

மலச்சிக்கல்: முருங்கை இலையில் காணப்படும் நார்ச்சத்து மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. இது தவிர, முருங்கையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பல விதமான செரிமான பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

8/8
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.





Read More