PHOTOS

Health News: கொத்தமல்லியின் அதிசய மருத்துவ குணங்கள் இதோ

நமக்கு எளிதாக கிடைக்கும் கொத்தமல்லியில் எவ்வளவு அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது பலருக்குத் தெரிவதில்லை. உங்களுக்கு மலச்சிக்கல் பிரச...

Advertisement
1/5
பச்சை கொத்தமல்லி கண்களுக்கு நன்மை பயக்கும்
பச்சை கொத்தமல்லி கண்களுக்கு நன்மை பயக்கும்

20 கிராம் கொத்தமல்லியை நசுக்கி, ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால் கண்களில் ஏற்படும் வலி, நீர் வடிதல் ஆகியவை குணமாகும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். 

2/5
பச்சை கொத்தமல்லி காயத்தை விரைவில் குணப்படுத்தும்
பச்சை கொத்தமல்லி காயத்தை விரைவில் குணப்படுத்தும்

பச்சை கொத்தமல்லி வாயில் உள்ள காயங்களையும் புண்களையும் குணப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள ஆண்டி-செப்டிக் பண்புகள் வாயின் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகின்றன.

3/5
மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்
மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்

மலச்சிக்கல் பிரச்சினையால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் உணவில் கொத்தமல்லியை சேர்க்கலாம். இது வயிற்றுப் பிரச்சினைகளை சரி செய்து செரிமான சக்தியை பலப்படுத்துகிறது. அதன் இலைகளை மோர் கலந்து குடிப்பதால் அஜீரணம், குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் பெருங்குடல் அழற்சி ஆகியவற்றில் நிவாரணம் கிடைக்கும்.

 

4/5
சிறுநீர் பிரச்சினைக்கு தீர்வு
சிறுநீர் பிரச்சினைக்கு தீர்வு

குளிர்காலத்தில் குறைந்த தண்ணீரைக் குடிப்பதால் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை அதிகரிக்கும். அத்தகைய சந்தர்ப்பத்தில், கொத்தமல்லி இலைகள், சட்னி மற்றும் உலர்ந்த கொத்தமல்லி ஆகியவற்றை உணவில் சேர்ப்பது சிறுநீர் கழித்தலை சீர் செய்யும். 

5/5
இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது
இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது

பச்சை கொத்தமல்லி இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த மிகவும் உதவும். 

 





Read More