PHOTOS

நோய்களை குணமாக்கும் கொய்யா! இது பழம் இல்ல... கொய்யா இலையின் மருத்துவ குணம்!

h: கொய்யாப் பழத்தில் மட்டுமல்ல, அதன் இலைகளிலும் மறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள், பல நோய்களை போக்கக்கூடியவை. கொய்யா இலைகள...

Advertisement
1/7
கொய்யா இலைகள்
கொய்யா இலைகள்

கொய்யாப்பழத்தின் சத்துக்கள் மற்றும் அதன் நோய் தீர்க்கும் பண்புகள் பற்றி பலருக்கும் தெரியும். ஆனால் கொய்யா மரத்தின் இலைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பல பண்புகளைக் கொண்டுள்ளது என்பது பலருக்குத் தெரியாது. கொய்யா இலைகள் பல உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன

2/7
கொய்யா இலைகளின் மகத்துவம்
கொய்யா இலைகளின் மகத்துவம்

கொய்யா இலைகளை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொண்டு அதை பயன்படுத்தினால் மருந்து மாத்திரை என பக்கவிளைவு தரும் நிவாரணத்தை தேட வேண்டாம்

3/7
பல்வலிக்கு கொய்யா இலை
பல்வலிக்கு கொய்யா இலை

பல்வலியில் இருந்து நிவாரணம் பெற, கொய்யா இலைகளை மென்று சாப்பிடலாம். வாய் துர்நாற்றம், வாயில் கசப்பு போன்ற உணர்வு இருந்தால், கொய்யா இலைகளை கொதிக்க வைத்து, இந்த நீரில் வாய் கொப்பளித்தால் தொல்லையே இருக்காது

4/7
வாய்ப்புண்ணுக்கு கொய்யா இலை
வாய்ப்புண்ணுக்கு கொய்யா இலை

கொய்யா இலைகளைப் பயன்படுத்தி வாய் புண்களை சரி செய்யலாம். கொய்யா இலையைக் கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால், வாயில் கொப்பளங்கள் ஏற்படாது

5/7
வயிற்று கோளாறுகளுக்கு கொய்யா இலை
வயிற்று கோளாறுகளுக்கு கொய்யா இலை

குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டால், கொய்யா இலைகளை கஷாயம் செய்து சாப்பிட்டால், விரைவில் நிவாரணம் கிடைக்கும். கொய்யா இலை கஷாயத்தை ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால் வாந்தி நிற்கும்  

6/7
நீரிழிவு
நீரிழிவு

கொய்யாப் பழத்தை சாப்பிடுவதும், கொய்யா இலைகளை உட்கொள்வதும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் கொய்யா, வேறு பல நோய்களையும் போக்கும்  

7/7
ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம்
ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம்

கொய்யா இலைகள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்றது. இருமல் மற்றும் சுவாச பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற உதவும் கொய்யா இலைகளில் அழற்சி எதிர்ப்பு கூறுகள் காணப்படுகின்றன, இது ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.





Read More