PHOTOS

டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டின் முதல் நாள் புகைப்படத் தருணங்கள்....

ந்தியா தலைமையேற்று நடத்திவரும் ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டின் முதல் நா...

Advertisement
1/9
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கி,18-வது உச்சி மாநாட்டை தலைநகரில் நடத்திக் கொண்டிருக்கிறது. 

2/9
டெல்லி பிரகதி மைதானம்
டெல்லி பிரகதி மைதானம்

டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் நிகழ்ச்சிகள் உலக அளவில் கவனிக்கப்படுகிறது  

3/9
பிரதமர் நரேந்திர மோடி உரை
பிரதமர் நரேந்திர மோடி உரை

இன்று (2023 செப்டம்பர் 9, சனிக்கிழமை) நடந்த முதல் நாள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையாற்றினார்.

4/9
பெயர்ப்பலகை
பெயர்ப்பலகை

பிரதமர் அமர்ந்துள்ள மேசை மீது இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

5/9
பாரத்
பாரத்

’இந்தியா’ என்ற நமது நாட்டின் பெயருக்கு பதிலாக, இந்திய அரசியலமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள பாரத் என்ற பெயரை ஜி 20 மாநாட்டின் பல்வேறு அதிகாரபூர்வ ஆவணங்களில் அரசு பயன்படுத்தியுள்ளது

6/9
பாரத் வெர்சஸ் இந்தியா
பாரத் வெர்சஸ் இந்தியா

பிரதமர் மோடி, “பாரத் வெர்சஸ் இந்தியா” சர்ச்சை குறித்து கருத்து கூறுவதை தவிர்க்குமாறு அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

7/9
உலகத் தலைவர்கள்
உலகத் தலைவர்கள்

ரஷ்யா மற்றும் சீனாவைத் தவிர, உலகின் முக்கியத் தலைவர்கள் பலரும் ஜி20 மாநாட்டிற்காக இந்தியாவில் கூடியிருக்கின்றனர்

8/9
வரவேற்பு
வரவேற்பு

இந்தியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த மாநாட்டிற்கு வந்தவர்களை பிரதமர் நரேந்திர மோடி அன்புடன் வரவேற்றார்

9/9
இந்தோனேசியா
இந்தோனேசியா

ஜி20 மாநாட்டுக்கு வந்த தலைவர்களில் பலரும் புகழ்பெற்ற காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சுற்றுலா சென்றனர். இது இந்தோனேசிய அதிபரும் அவர் மனைவியும்....





Read More