PHOTOS

ஊட்டச்சத்து இருந்தாலும் எலும்பு ஆரோக்கியத்திற்கு எதிரியாகும் ‘சில’ ஆரோக்கிய உணவுகள்!

rong> : உடலுக்கு வலிமை அளிக்கும் எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால் நோய்களின் தாக்கம் குறைவாகவே இருக்கும். எலும்புகள் பலவீனமாக இருந்...

Advertisement
1/9
எலும்புகள்
எலும்புகள்

உடலின் வலிமைக்கு, எலும்புகள் உட்பட அனைத்து உறுப்புகளுக்கும் ஊட்டச்சத்து தேவை. போதுமான ஊட்டச்சத்து கிடைக்காதபோது, ​​​​எலும்புகள் பலவீனமடையத் தொடங்கும். சில உணவுகள் ஆரோக்கியமானதாக இருந்தாலும், எலும்புகளுக்கு ஊட்டமளிப்பதற்குப் பதிலாக, அவற்றை பலவீனப்படுத்தும்

2/9
இரும்புச்சத்து குறைபாடு
இரும்புச்சத்து குறைபாடு

பொதுவாக உடலின் எலும்புகள் வலுவாக இருக்க இரும்புச்சத்து உட்பட பல சத்துக்கள் தேவை. எனவே ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்பது வழக்கம்

3/9
சத்தான உணவுகள்
சத்தான உணவுகள்

ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், அவற்றில் சில எலும்புகளுக்கு நல்ல தேர்வாக இருப்பதில்லை என்பதுடன், அவை எலும்புகளிலிருந்து ஊட்டச்சத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன

4/9
எலும்பு அடர்த்தி
எலும்பு அடர்த்தி

எலும்புகளின் ஆரோக்கியமும் அடர்த்தியும் தான் நமது உடல் இயக்கத்திற்கும், தோற்றத்திற்கும் உதவி புரிகின்றன. ஆனால், அதில் ஏற்படும் பிரச்சனை உடலழகையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன

5/9
முதுகெலும்பு வலிமை
முதுகெலும்பு வலிமை

எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால் தான், முதுகெலும்பு முதல் பல் வரை அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும்

6/9
கீரை
கீரை

கீரைகள் உடலாரோக்கியத்திற்கு நன்மை பயப்பவை என்றாலும், கீரை எலும்புகளுக்கு நன்மை பயப்பதில்லை. கால்சியம் அதிகம் இருந்தாலும், கீரையில் உள்ள ஆக்சலேட் என்ற சிறப்பு தன்மை, கால்சியம் உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. எனவே, எலும்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கீரையை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. 

7/9
உப்பு சேர்த்த உணவுகள்
உப்பு சேர்த்த உணவுகள்

சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் என்பதுபோலவே, உப்பு அதிகம் உள்ள உணவுகளும் எலும்புகளை பலவீனப்படுத்தும். சிறுநீரில் கால்சியம் அளவை நிர்ணயிக்க உப்பு காரணமாகிறது என்பதால், உடலில் உப்பின் அளவு அதிகரித்தால் அது உடலில் கால்சியம் குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே,எலும்பு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிகப்படியான உப்பை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்.

 

8/9
இரும்புச்சத்து
இரும்புச்சத்து

உடலுக்கு மிக முக்கியமான சத்தான இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால் இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள் எலும்புகளுக்கு நல்லதில்லை, ஏனெனில் அதிக இரும்புச்சத்து உணவுகளை உட்கொள்வது எலும்புகளை பலவீனப்படுத்தும் என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஆனால் இரும்புச்சத்து உணவுகளை உட்கொள்வதைக் குறைப்பது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பதால், எலும்புத் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், மருத்துவர்களின் அறிவுரையை பின்பற்றுவது அவசியம்

9/9
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு:  இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை





Read More