PHOTOS

எச்சரிக்கை! நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்யும் ‘சில’ உணவுகள்!

நோய்களில் இருந்து காக்கிறது. உடலுக்கு கவசமாக இருக்கும் இந்த சக்திக்கு பலர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை...

Advertisement
1/6
நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தி

ஆரோக்கியமான உணவில் இருந்து உடல் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களைப் பெறுகிறது. வைட்டமின்கள் முதல் எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம் அல்லது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பயோட்டின் வரை அனைத்திற்கும் உங்கள் உணவே ஆதாரம். இந்நிலையில், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் சில உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

2/6
குளிர் பானங்கள்
குளிர் பானங்கள்

இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுவதன் மூலம் உங்கள் உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் நீங்கள் அதிக சர்க்கரை இனிப்புகளை உட்கொள்ளும்போது, ​​அது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை சேதப்படுத்துகிறது மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் வலிமையைக் குறைக்கிறது. 

3/6
துரித உணவுகள்
துரித உணவுகள்

ஆரோக்கியமான குடல் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு நார்ச்சத்து தேவைப்படுகிறது. துரித உணவுகளில் நார்சத்து என்பதே இல்லை. எனவே இதனை தவிர்க்க வேண்டும். புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது, ஆனால் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடாதவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. 

4/6
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள்

ரொட்டி முதல் சிப்ஸ் வரை, பதப்படுத்தப்பட்ட பல பொருட்களை பலர் தினமும் உட்கொள்ளகிறார்கள். பதப்படுத்தப்பட்ட மற்றும் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் எதுவுமே இல்லை, எனவே அவற்றின் நுகர்வு உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.

5/6
மது
மது

மது அருந்துவது நோயெதிர்ப்பு மண்டலத்தை பெரிதும் பாதிக்கிறது.  இது பல தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, தின்பமும் மது அருந்தும் பழக்கம் இருந்தால் உடனே கைவிடவும். அளவோடு என்றாவது ஒரு நாள் மது பானம் எடுத்துக் கொள்வதில் தவறில்லை.

6/6
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.





Read More