PHOTOS

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்; யாரெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

ணம் மே 16ஆம் தேதி நிகழவுள்ளது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த சந்திர கிரகணம் விசாக நட்சத்திரம் மற்றும் விருச்சிக ராசியில் வைஷாக பூர்ணிம...

Advertisement
1/4
கடகம்
கடகம்

கடகம் - கடக ராசிக்காரர்கள் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு தகராறு ஏற்படலாம். இந்த கிரகணம் தொழில் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் அடிப்படையில் நல்லதல்ல. செலவுகள் அதிகரிக்கலாம். பணத்தை சேமிப்பதில் சிரமங்கள் இருக்கலாம்.

2/4
துலாம்
துலாம்

துலாம்- துலாம் ராசிக்காரர்கள் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கான அதிகப்படியான உற்சாகம் தீங்கு விளைவிக்கும். ஒருவரை கண்மூடித்தனமாக நம்புவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் பேச்சில் பொறுமை தேவை. கருத்து சொல்வதற்கு முன் யோசித்து சொல்லவும். 

3/4
தனுசு
தனுசு

தனுசு- தனுசு ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் பிரச்னைகள் அதிகரிக்கலாம். நீதிமன்ற வழக்குகளில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கத் தவறினால் பெரும் பாதிப்பு ஏற்படும். மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். நிதி சிக்கல்கள் ஏற்படலாம்.

4/4
மகரம்
மகரம்

மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணம் நல்லதல்ல. உங்கள் ராசியின் அதிபதி சனிபகவான். இந்த ராசிக்காரர்கள் சனி தசையால் ஏற்கெனவே அவதிப்படுகிறார்கள். எனவே, கிரகண காலத்தில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)





Read More