PHOTOS

நாள் முழுவதும் எனர்ஜியோட இருக்கணுமா... ஆற்றலை அள்ளித் தரும் ‘சில’ காலை உணவுகள்!

தால், அது உடலில் ஆற்றலை அதிகரிப்பதோடு, விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது. மேலும், உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கிறது. நாள் முழுவதும் உடலை ச...

Advertisement
1/8
காலை உணவு
காலை உணவு

ஒரு நாள் முழுக்க சுறு சுறுப்பாகவும், கொஞ்சமும் சோர்வடையாமலும் இருக்க காலை உணவு மிகவும் அவசியம். அதிலும் அந்த உணவு சிறந்த உணவாக இருக்க வேண்டும். காலை உணவில் புரதம், நார்சத்து, நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட் கொண்ட சரிவிகித உணவுகளை சேர்ப்பதன் மூலம் ஆற்றலோடு, வளர்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்க முடியும்.

2/8
வாழைப்பழம்
வாழைப்பழம்

வாழைப்பழத்தை அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும். இதன் மூலம், உங்கள் உடல் நல்ல சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவற்றில் நிறைந்திருக்கும். 

 

3/8
முட்டை
முட்டை

ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த முட்டைகள் உங்கள் உடலை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். மேலும், முட்டையில் உள்ள கோலின் என்ற அத்தியாவசிய ஊட்டச்சத்து மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டைத் தூண்டுகிறது. 

4/8
இட்லி - தோசை
இட்லி - தோசை

காலை உணவாக ராகி கஞ்சி, ராகி இட்லி, ராகி தோசை ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு நார்சத்து, இரும்பு சத்து போதுமான அளவு கிடைக்கிறது. ஆற்றலை அள்ளி வழங்கும் ராகி வயிறு நீண்ட நேரம் நிரம்பியதாக உணர வைக்கிறது. ப்ரோபயோடிக் உணவுகளான இட்லி, தோசையை சாம்பார் -சட்னியுடன் சாப்பிடுவதால் புரதம், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் ஏராளமாக கிடைக்கும் இட்லியில் கலோரிகள் மிகவும் குறைவு.

5/8
உலர் பழங்கள்
உலர் பழங்கள்

உலர் பழங்கள் மற்றும் விதைகளில் நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளதால், நாள் வயிறு நிறைவாக உணர வைக்கும். இதய ஆரோக்கியத்திற்கும் உலர் பழங்கள் சிறந்தவை.

6/8
இனிப்புகள்
இனிப்புகள்

பேஸ்ட்ரிகள் அல்லது பான்கேக்குகள் போன்ற சர்க்கரை அதிகம் உள்ள பொருட்களை உண்பது உடலுக்குள் இன்சுலின் உற்பத்தியை பாதித்து நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.

7/8
துரித உணவு
துரித உணவு

காலை உணவில் துரித உணவுகளை மறந்தும் கூட சாப்பிட வேண்டாம். அதிக உப்ப , அதிக சோடியம் கொண்ட இவை சோம்பலை கொடுப்பதோடு நோயெதிர்ப்பு சக்தி காலி செய்து விடும்

8/8
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. இது எந்த ஒரு மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றானது அல்ல. ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.





Read More