PHOTOS

வழுக்கை, முடி உதிர்தல் பிரச்சனைகளை தடுக்கும் ‘சூப்பர்’ யோகாசனங்கள்!

& Hairfall: முன்பெல்லாம், வயது அதிகமாக அதிகமாக,  முடி தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால் இப்போது சிறு வயதிலேயே ...

Advertisement
1/8
யோகாசனம்
யோகாசனம்

இன்றைய காலகட்டத்தில் தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை இளைஞர்கள் அதிகம் சந்தித்து வருகின்றனர்.  ஆண்களுக்கு இளம் வயதில் வழுக்கை, இளநரை  ஏற்படுதல்,  பெண்களுக்கு முடி உதிர்தல் உள்ளிட்ட பல பிரச்சனைகள், இளநரை போன்றவை ஏற்படுகிறது. 

2/8
முடி வளர்ச்சிக்கான யோகா
முடி வளர்ச்சிக்கான யோகா

முடி வளர்ச்சிக்கான யோகா: மோசனமான வாழ்க்கை முறை மட்டுமல்லாது, ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், மாசுபாடு போன்றவற்றாலும் முடி உதிர்தல் மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. முடி வளர்ச்சி சிறப்பாக இருக்கவும், முடி உதிர்தலைத் தடுக்கவும் யோகா மிகவும் உதவியாக இருக்கும், ஏனெனில் யோகா நரம்பு மண்டலம் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி,  சரியான அளவு ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் முடியை சென்றடைய உதவுகிறது. 

3/8
சர்வாங்காசனம்
சர்வாங்காசனம்

சர்வாங்காசனம்:  ஷோல்டர் ஸ்டாண்ட் என்றும் அழைக்கப்படும் சர்வாங்காசனம், தலைகீழாக நிற்பதன் எளிய முறை பயிற்சியாகும். நீங்கள் யோகாவில் புதியவராக இருந்தால் கூட, இதை முயற்சி செய்யலாம். இது மிகவும் கடினம் அல்ல, உங்கள் முடிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

4/8
அதோ முக ஸ்வாஸனா
அதோ முக ஸ்வாஸனா

அதோ முக ஸ்வாஸனா: கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்தும் மற்றொரு சிறந்த ஆசனமான அதோ முக ஸ்வாசனா, கீழ்நோக்கி பார்க்கும் நிலையிலான நாய் போன்ற நிலை என்றும் அழைக்கப்படுகிறது. உங்கள் தசைகளை தளர்த்தவும், நீட்டவும் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

5/8
பாலாசனம்
பாலாசனம்

பாலாசனம்: குழந்தையின் போஸ் என்றும் அழைக்கப்படும் பாலாசனம் என்பது உங்கள் கால்களை மடக்கி முன்னோக்கி வளைத்து, தரையைத் தொட்டு, உங்களால் முடிந்தவரை கைகளையும் உடலையும் நீட்டுவது. இந்த ஆசனம் உங்கள் தசைகளை நீட்டுவதற்கும் தளர்த்துவதற்கும் உதவும்.

6/8
சிரசாசனம்
சிரசாசனம்

சிரசாசனம்: ஹெட்ஸ்டாண்ட் என்றும் அழைக்கப்படும் சிரசாசனம் ஒப்பீட்டளவில் கடினமான யோகா ஆசனம். நீண்ட கால யோகா பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அதைச் செய்ய முடியும். ஆனால், அது முடியாதது அல்ல. நிறைய பயிற்சியுடனும் செய்யலாம். இது உங்கள் உச்சந்தலையில் அதிகபட்ச இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. இது புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, முடி நரைப்பதைத் தடுக்கிறது, வழுக்கை ஏற்படாமல் தடுக்கிறது.

7/8
மன அழுத்தம்
மன அழுத்தம்

மன அழுத்தமும், முடி உதிர்தல், மற்றும் இளநரைக்கு முக்கிய காரணமாக அனைகிறது.  மன அழுத்தத்திலிருந்து  விடுபட யோகா மற்றும் தியானம் மிகவும் சிறந்தது. மேலும் இதனால், உங்கள் நினைவுத்திறனும் மேம்படும்.

8/8
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.





Read More