PHOTOS

ஜிம், டயட் இல்லாமல் ஜம்முனு வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்

டை அதிகரிப்பது சாதாரணமாக தோன்றினாலும் அதன் பக்க விளைவுகள் மிகவும் கடுமை...

Advertisement
1/12
உடல் எடையை குறைக்க
உடல் எடையை குறைக்க

உடல் எடை அதிகரிப்பதால், நாம் நமது அன்றாட பணிகளை செய்வதில் சிரமம் ஏற்படுவதுடன் இன்னும் பல்வேறு உடல்நல பிரச்சனைளும் நம் உடலை பற்றிகொள்கின்றன. உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால், அதை குறைப்பது மிக கடினம்.  

2/12
உடல் எடை
உடல் எடை

பலர் உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மெற்கொள்கிறார்கள். ஆனால், நமது தினசரி உணவில் சில முக்கிய விஷயங்களை நினைவில் கொண்டால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

3/12
தண்ணீர்
தண்ணீர்

தண்ணீர்: காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது செரிமான செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இதன் மூலம் வளர்சிதை மாற்ற விகிதமும் கணிசமாக அதிகரிக்கிறது. இது தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது. 

 

4/12
காலை உணவு
காலை உணவு

காலை உணவு: காலை உணவில் அதிக கொழுப்புள்ள, எண்ணெய் அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வெண்டும். அதிக புரதச்சத்து உள்ள உணவுகள், காய்கள், பழங்கள், முட்டை, தயிர், ஓட்ஸ் ஆகிய உணவுகளை உட்கொள்வது உடல் எடையை குறைப்பதோடு, நாள் முழுதும் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் உதவும்

5/12
மிளகு
மிளகு

மிளகு செரிமானத்தை சீராக்கி உடல் உப்பசம், வாயுத்தொல்லை, அஜீரண கோளாறுகள் ஆகியவற்றை தவிர்க்க உதவுகின்றது. வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் மிளகு, தொப்பை கொழுப்பை கரைக்கவும், கலோரிகளை எரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கின்றது.

6/12
மஞ்சள்
மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கெட்ட கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகின்றது. இந்த காரணத்தினால் எடை இழப்பில் மஞ்சள் மிகவும் உதவியாக இருக்கின்றது. இதனால் கெட்ட கொழுப்பின் அளவும் குறைகிறது.

7/12
ஓட்ஸ்
ஓட்ஸ்

ஓட்ஸ்: உடல் எடை, இரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் ஆகியவற்றை குறைக்க நினைக்கும் அனைவருக்கும் ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவாக கருதப்படுகின்றது. இது நாள் முழுதும் உடலுக்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது. ஆகையால், தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. 

8/12
முட்டை
முட்டை

முட்டை: முட்டையில் அதிகப்படியான புரதச்சத்து உள்ளது. ஆகையால், முட்டை மிகச்சிறந்த காலை உணவாக கருதபடுகின்றது. முட்டையின் வெள்ளைக்கருவில் வைட்டமின் பி12, வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் என பல வித ஊட்டச்சத்துகள் உள்ளன. முட்டையை உட்கொள்வது எடை இழப்பில் பெரிய அளவில் உதவும். 

9/12
பாதாம்
பாதாம்

பாதாம்: பொதுவாகவே உலர் பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லவையாக கருதப்படுகின்றன. குறிப்பாக, இவை கலோரிகளை அதிகரிக்காமல் உடலுக்கு தேவையான போஷாக்கை அளிக்கின்றன. பாதாமில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நம் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் கொண்டவை. தினமும் சிறிய அளவில் பாதாம் உட்கொள்வதால், நம் உடலில் கொழுப்பு கரைந்து உடல் எடையும் குறைகின்றது. 

10/12
ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகரில் ஏகப்பட்ட ஆரோக்கிய பண்புகள் உள்ளன. ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்துக் குடித்தால், தொப்பை கொழுப்பு (Belly Fat) விரைவில் குறையும். இது மட்டுமல்லாமல், ஆப்பிள் சைடர் வினிகர் நமது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கின்றது. 

11/12
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை சமையலறையில் இருக்கும் மசாலாக்களில் அதிக ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ள மசாலாவாக உள்ளது. இது கலோரிகளை வேகமாக எரிக்கவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றது. 

12/12
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  





Read More