PHOTOS

அசிங்கமான தொப்பை கொழுப்பை அசால்டாய் குறைக்க மஞ்சள் ஒன்று போதும்

எடையைக் குறைக்க மிகவும் பயனுள்ள மசாலாக்களில் ஒன்று மஞ்சள். எனவே பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட மஞ்சளை பயன்படுத்து...

Advertisement
1/6
மஞ்சள் நீர்
மஞ்சள் நீர்

மஞ்சள் நீர்: வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீரைக் குடிப்பது நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், மலேஉமி கொழுப்பை எரிக்க உதவும். இதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது மஞ்சளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாகிய பிறகு அடுப்பை அணைக்கவும். பின்னர் ஒரு கிளாஸில் வடிகட்டி சிறிது எலுமிச்சை அல்லது தேன் சேர்த்து குடிக்கவும்.

 

2/6
மஞ்சள் மற்றும் இஞ்சி
மஞ்சள் மற்றும் இஞ்சி

மஞ்சள் மற்றும் இஞ்சி: உடல் எடை குறைய மஞ்சள் மற்றும் இஞ்சியை நீங்கள் உட்கொள்ளலாம். இவை உடலில் இருக்கும் கூடுதல் கொழுப்பை குறைக்க உதவும். இதற்கு ஒரு கப் தண்ணீரில் சிறிது இஞ்சி போட்டு, அதில் இரண்டு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு அதை வடிகட்டி குடிக்கவும்.

 

3/6
மஞ்சள் மற்றும் தேன்
மஞ்சள் மற்றும் தேன்

மஞ்சள் மற்றும் தேன்: எடை குறைய மஞ்சள் மற்றும் தேன் உதவும். இதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தேனை போட்டு அதில், சிறிது மஞ்சளை கலந்து பின்னர் அதை சாப்பிடவும்.

4/6
மஞ்சள் பால்
மஞ்சள் பால்

மஞ்சள் பால்: உடல் எடை குறைய வேண்டுமெனில் நீங்கள் மஞ்சள் பால் குடிக்கலாம். இற்கு, ஒரு கிளாஸ் சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இரவும் தூங்குவதற்கு முன்பு உட்கொள்ளவும். இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறையத் தொடங்கும்.

5/6
மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை
மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை

மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை: மஞ்சளுடன் இலவங்கப்பட்டை சேர்த்து சாப்பிட்டால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். இவை இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். இதற்கு, ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி சூடாக்கவும். பின்னர் அதில் ஒரு சிறிய துண்டு இலவங்கப்பட்டை மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் கேஸை அனைத்து இந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை எளிதாக குறையும்.

6/6
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.





Read More