PHOTOS

நோய்களை அடித்து விரட்டும் டிராகன் பழ ஜூஸ்... புற்றுநோய் முதல் சுகர் வரை!

fits: டிராகன் பழ ஜீஸை தொடர்ந்து குடித்து வருவது மூலம் உங்கள் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறி...

Advertisement
1/7
டிராகன் பழ ஜூஸ்
டிராகன் பழ ஜூஸ்

டிராகன் பழத்தின் வெளிப்புற தோலை எடுத்து, உட்புற பழத்தை மட்டும் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும். அதில் இருக்கும் கருப்பு நிற விதைகள் போன்றவை உடலுக்கு நல்லது. அதன் மூலம் கிடைக்கும் 5 நன்மைகள் குறித்து இதில் காணலாம்.

2/7
டிராகன் பழ ஜூஸ்
டிராகன் பழ ஜூஸ்

புற்றுநோய் அபாயம் குறையும்: டிராகன் பழத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட்கள், பினாலிக் அமிலம்,  பீட்டாசயனின், ஃபிளாவனாய்டுகள் ஆகிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து செய்லபடும். ஃபரீ ரேடிக்கல்கள்தான் புற்றுநோய் மற்றும் இளம் வயதிலேயே முதிர்ச்சியடைத் ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது. எனவே, இதன் ஜூஸை ஒவ்வொருவரும் நிச்சயம் அருந்தலாம். 

3/7
டிராகன் பழ ஜூஸ்
டிராகன் பழ ஜூஸ்

கர்ப்பிணி பெண்களுக்கு: கருவின் மூளை வளர்ச்சிக்கும் உதவும் நல்ல கொழுப்புகள் டிராகன் பழத்தில் உள்ளது. நல்ல கொழுப்புகளால் உடலில் சக்தியும் அதிகரிக்கும். தொற்று நோய் தாக்காமல் இருக்க இந்த ஜூஸ் உதவும். மலச்சிக்கல் மற்றும் மற்ற வாயு சார்ந்த வயிறு பிரச்னைகளுக்கு கர்ப்பிணிகளுக்கு இது உதவும். ஹீமோகுளோபின் உளவும் உயரும். 

 

4/7
டிராகன் பழ ஜூஸ்
டிராகன் பழ ஜூஸ்

சுகர் வராமல் தடுக்கும்: இதில் ஃபைபர் அதிகம் இருக்கும் காரணத்தால் இது சர்க்கரை அதிகம் எடுத்துக்கொள்ள தூண்டாது. கணையத்தின் சிதைந்த செல்களை நிவர்த்தி செய்யும் தன்னை இந்த டிராகன் பழ ஜூஸில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

5/7
டிராகன் பழ ஜூஸ்
டிராகன் பழ ஜூஸ்

இதயத்திற்கும் நல்லது: இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. இது ஹீமோகுளோபின் அளவை உயர்த்தும். இதனால், ஆக்ஸிஜன் இதயத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் செல்லும். சிவப்பு நிறத்திலான அந்த பழத்தில் பெட்டாலைன்ஸ் இடம்பெற்றிருக்கும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும். அதில் உள்ள கருப்பு விதைகளில் omega -3, omega-9 இதயத்திற்கு நல்லது, இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும். 

 

6/7
டிராகன் பழ ஜூஸ்
டிராகன் பழ ஜூஸ்

நோய் எதிர்ப்பு சக்தி: இதில் வைட்டமிண் சி அதிகம் உள்ளது. இந்த ஆண்டிஆக்ஸிடன்ட் நோய்களில் இருந்து நம்மை காத்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். தினமும் டிராகன் பழ ஜூஸை குடிப்பதால் நோயில் இருந்து நீங்கள் தற்காத்துக்கொள்ளலாம்.

7/7
டிராகன் பழ ஜூஸ்
டிராகன் பழ ஜூஸ்

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.





Read More