PHOTOS

கெட்ட கொழுப்பை ஒட்ட விரட்ட.. டயட்டிலும் வாழ்விலும் இந்த மாற்றங்களை செய்தால் போதும்

ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், நம் உடல் இதயம் தொடர்பான நோய்களுக்கு ஆளாகிறது. இதயத் தசைகளுக்கு ரத்தம் சென்றடையாதபோது, ​​இதய நோய் வருவதற்கா...

Advertisement
1/11
கொலஸ்ட்ரால்
கொலஸ்ட்ரால்

பல இயற்கையான வழிகளில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம். இதற்கு நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2/11
காலை உணவு
காலை உணவு

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த காலை உணவில், அதிக எண்ணெய் இல்லாத, நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். காலை உணவாக ஓட்ஸ் அல்லது கஞ்சி சாப்பிடலாம். இவற்றில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவும் கட்டுக்குள் வைக்கும். 

3/11
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. இது கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பதில் சிறப்பாக செயல்படும் ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். ப்ரோக்கோலியில் சல்ஃபோராபேன் என்ற கலவை உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் என்று கூறப்படுகின்றது. 

4/11
நார்ச்சத்து
நார்ச்சத்து

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்: கொலஸ்ட்ராலை குறைக்க உணவில் கரையக்கூடிய நார்ச்சத்தை அதிகரிக்க வேண்டும். கரையக்கூடிய நார்ச்சத்து இரத்த ஓட்டத்தில் கொலஸ்ட்ராலை உறிஞ்சுவதைக் குறைக்கிறது. ஓட்ஸ், காராமணி, ஆப்பிள், பேரிக்காய் போன்ற உணவுகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது.

5/11
ஒமேகா -3 கொழுப்பு அமிலம்
ஒமேகா -3 கொழுப்பு அமிலம்

ஒமேகா -3 கொழுப்பு அமிலம்: ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி, அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆளிவிதை போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட உணவுகளை உட்கொள்வது கெட்ட கொழ்புக்கை நீக்கி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

6/11
காய்கறிகள்
காய்கறிகள்

பச்சை காய்கறிகள்: கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். பீன்ஸ், வெண்டைக்காய், கீரை போன்ற காய்கறிகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாகவே காய்களில் ஏராளமான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்து உள்ளது. இவை கெட்ட கொழுப்பை நீக்கி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

7/11
முழு தானியங்கள்
முழு தானியங்கள்

வெள்ளை அரிசி, பாலிஷ் செய்யப்பட்ட கோதுமை ஆகியவற்றுக்கு பதிலாக, உங்கள் உணவில் பார்லி, ராகி, சாமை, சோளம், ஓட்ஸ் போன்ற முழு தானியங்களை சேர்த்துக்கொள்ளலாம். இவை கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். இரத்த சர்க்கரை அளவும் இவற்றினால் கட்டுக்குள் இருக்கும்.

8/11
உடற்பயிற்சி
உடற்பயிற்சி

கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் செயல்பாடற்ற தன்மை கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். ஆகையால் தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, யோகாசனம் என ஏதாவது ஒரு விதமான உடல் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும். 

9/11
உறக்கம்
உறக்கம்

இரவில் தாமதமாக சாப்பிடக்கூடாது. இரைவில் சீக்கிரமே சாப்பிடுவது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் எடையையும் குறைக்க உதவும். உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, இரவு உணவில், லேசான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். 

 

10/11
சர்க்கரை மற்றும் உப்பு
சர்க்கரை மற்றும் உப்பு

அதிக அளவில் சர்க்கரை மற்றும் உப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காலை, மதியம், இரவு என அனைத்து வேளைகளிலும் உணவில் உப்பு மற்றும் சர்க்கரையை மிகவும் குறைந்த அளவிலேயே பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாவதை தவிர்க்கலாம். 

11/11
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.





Read More