PHOTOS

கால்களில் இந்த அறிகுறிகள் இருக்கா? ஜாக்கிரதை... நீரிழிவு நோயாக இருக்கலாம்

ய் மிக கொடூரமான நோயாக பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இதில் சிறிது அலட்சியம் ஏற்பட்டால் கூட அது மிகவும் ஆபத்தானதாகிவிடும். நீரிழிவு என்பது...

Advertisement
1/6
பாதங்களில் நீரிழிவு நோயின் அறிகுறிகள்
பாதங்களில் நீரிழிவு நோயின் அறிகுறிகள்

உங்கள் பாதங்களில் சில விசித்திரமான அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக இரத்த குளுக்கோஸ் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.

2/6
பாதங்களில் வலி
பாதங்களில் வலி

நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால், உங்களுக்கு டயபடிக் நியூரோபதி நோய் வரக்கூடும். இதில் நரம்புகள் சேதமடைகின்றன. இதன் காரணமாக பாதங்களில் கூரான வலியும் வீக்கமும் ஏற்படும். சில சமயங்களில் பாதங்கள் மரத்துப் போகும்.

3/6
நகங்களின் நிறத்தில் மாற்றம்
நகங்களின் நிறத்தில் மாற்றம்

சர்க்கரை நோய் தாக்கினால், கால் நகங்களின் நிறம் மாறுகிறது. பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் நமது நகங்கள் திடீரென்று கருப்பாக மாறும். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.

4/6
தோல் கடினப்படுதல்
தோல் கடினப்படுதல்

நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால், உங்கள் கால்கள் மற்றும் உள்ளங்கால்களில் உள்ள தோல் கடினமடையத் தொடங்குகிறது, இருப்பினும் இது தவறான அளவு காலணிகளை அணிவதாலும் நிகழலாம். எனினும் இரத்த சர்க்கரை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 

5/6
பாதங்களில் புண்கள்
பாதங்களில் புண்கள்

காலில் புண் ஏற்பட்டால், பாதங்களில் காயங்கள் தோன்ற ஆரம்பித்து, சில சமயங்களில் தோலும் வெளிவர ஆரம்பிக்கும். இந்த நோய் வரம்புக்கு அப்பால் அதிகரித்தால், மருத்துவர் காலை துண்டிக்க வேண்டிய கட்டாயம் கூட ஏற்படும். ஆகையால், இந்த அறிகுறியை கண்டால் உடனே பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும். 

6/6
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.





Read More