PHOTOS

பெண்களுக்கு மத்திய அரசின் நவராத்திரி பரிசு! சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது

Subsidy: பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனாவின் மானியத்தொகை சிலிண்டர் ...

Advertisement
1/7
உஜ்வலா திட்ட பயனாளி
உஜ்வலா திட்ட பயனாளி

உஜ்வலா திட்ட பயனாளிகளுக்கு மத்திய அரசு நவராத்திரி பரிசு வழங்கியிருக்கிறது. பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) பயனாளிகளுக்கான மானியத் தொகை அதிகரிக்கப்பட்டு 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 200 ரூபாய் மானியம் கொடுத்து வந்த மத்திய அரசு, தற்போது மானியத்தை 100 ரூபாய் அதிகரித்துள்ள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று (2023 அக்டோபர் 4 புதன்கிழமை) தெரிவித்தார்.

2/7
3200 ரூபாய் மானியம்
3200 ரூபாய் மானியம்

இதுவரை, 200 ரூபாய் மானியத்துடன், மானியத்துடன் கூடிய எல்பிஜி சிலிண்டரின் விலை, 703 ரூபாயாக இருந்தது. தற்போது, மானியம் மேலும், 100 ரூபாய் அதிகரிக்கப்பட்ட மானியத்தில் எல்பிஜி சிலிண்டரின் விலை, 603 ரூபாயாக குறையும்.

3/7
PMUY எரிவாயு சிலிண்டர் மானியத் திட்டம்
PMUY எரிவாயு சிலிண்டர் மானியத் திட்டம்

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள (பிபிஎல்) குடும்பப் பெண்களுக்காக எல்பிஜி இணைப்புகளை வழங்க PMUY எரிவாயு சிலிண்டர் மானியத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் மே 2016 இல் தொடங்கப்பட்டது

4/7
நவராத்திரி திருவிழா
நவராத்திரி திருவிழா

நவராத்திரி திருவிழா தொடங்குவதற்கு முன்னதாக ஏழை சகோதரிகளுக்கு பரிசு கொடுக்கும் விதமாக மத்திய அரசு எரிவாயு சிலிண்டருக்கு மானியம் அளித்துள்ளது

5/7

பிரதம மந்திரி உஜ்வலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கான மானியத் தொகையை எல்பிஜி சிலிண்டருக்கு (LPG Gas Cylinder) 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது

6/7
எல்பிஜி வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை
எல்பிஜி வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை

இதற்கு முன்னதாக, ஆகஸ்ட் மாதம் அனைத்து நுகர்வோருக்குமான எல்பிஜி வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டது

7/7
75 லட்சம் எல்பிஜி இணைப்புகள்
75 லட்சம் எல்பிஜி இணைப்புகள்

பிரதம மந்திரி உஜ்வலா யோஜனா திட்டத்தின் கீழ் 75 லட்சம் எல்பிஜி இணைப்புகளை வழங்குவதற்காக எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு ரூ.1,650 கோடியை வெளியிட மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது





Read More