PHOTOS

அடிக்கடி ஏப்பம் வந்துக்கிட்டே இருக்கா... காரணம் இது தான்!

ஒரு இயல்பான காரியம். ஆனால் ஏப்பம் அடிக்கடி வந்தாலோ, அல்லது சத்தமாக அருகில் இருப்பவர்களுக்கு கேட்கும் அளவுக்கு இருந்தா...

Advertisement
1/8
ஏப்பம்
ஏப்பம்

பல சமயங்களில், தர்மசங்கடத்தை கொடுக்கும் ஏப்பம் ஏன் ஏற்படுகிறது என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். உணவோடு நாம் விழுங்கக்கூடிய காற்று, வெளியேற்றும் நிகழ்வு தான் ஏப்பம். இது இயல்பான ஒன்று தான் என்றாலும்,  அதிக அளவில் ஏப்பம் விடுவது பல சமயங்களில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.

2/8
உணவுக்குழாய்
 உணவுக்குழாய்

வயிற்றையும் தொண்டையும் இணைக்கும் உணவுக்குழாயில் அதிகமாக இருக்கும் காற்று வெளியேறும் போது ஏப்பம் நிகழ்கிறது. வேக வேகமாக சாப்பிடும் போது, வேக வேகமாக தண்ணீர் குடிக்கும் போது அல்லது வேகமாக எதையாவது குடிக்கும் போது ஏப்பம் வரலாம். 

3/8
கர்ப்பம்
கர்ப்பம்

கர்ப்பம் ஹார்மோன்களில் மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோன் ஸ்பைன்க்டர் தசையை தளர்த்தி அதன் மூலம்  ஏப்பம் ஏற்பட காரணமாகிறது

4/8
அஜீரணம்
அஜீரணம்

சில வகையான உணவை வயிறு எளிதில் ஜீரணிக்க முடியவில்லை என்னும் போது, அடிக்கடி ஏப்பத்தை ஏற்படுத்தும். சில வகையான உணவை ஒத்துக்கொள்ளாதவர்களுக்கும் இது நிகழலாம். அலர்ஜியாகும் உணவு வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ஏப்பம் அதிகரிக்கும்.

5/8
ஹெவியான உணவு
ஹெவியான உணவு

ஜீரணக்க எளிதாக இல்லாத ஹெவியான உணவு நெஞ்செரிச்சல், புளிப்பான ஏப்பத்தை உண்டு செய்யும். இதனால் அமிலத்தன்மை அதிகரித்து அதை தொடர்ந்து ஏப்பம் ஏற்படும்.

6/8
ஹார்மோன் கோளாறு
ஹார்மோன் கோளாறு

தைராய்டு போன்ற ஹார்மோன் கோளாறுகள் கொண்டிருப்பவர்களுக்கு இயல்பாகவே இரத்தத்தில் அமிலத்தன்மை இருக்கும். அவர்களுக்கும் ஏப்பம் அதிக அளவில் ஏற்படும். 

7/8
மலச்சிக்கல்
மலச்சிக்கல்

மலச்சிக்கல் என்பது  பெரும்பாலானோருக்கு ஏற்படக்கூடிய மற்றொரு செரிமான பிரச்சனையாகும். இது சிலருக்கு அடிக்கடி வரலாம். இது அடிக்கடி  ஏப்பம் வருவதற்கு வழிவகுக்கும்.

8/8
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.





Read More