PHOTOS

20 நிமிடத்தில் முடிக்கு அதிசயத்தை செய்யும் காபி பொடி தேங்காய் எண்ணெய்

ழுந்தவுடன் ஒரு கப் சூடான காபி நமது நாளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். ஆனால் இதே காபி கூந்தல் மற்றும் சருமத்திற்கு பல நன்மைகளை...

Advertisement
1/7
காபி
காபி

காலையில் ஒரு கப் சூடான காபி குடித்தால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். ஆனால் இந்த காபி முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

2/7
முடி வளர்ச்சி
முடி வளர்ச்சி

காபி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. அதனுடன் காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து கூந்தலை பாதுகாக்க உதவுகிறது. எனவே  கூந்தலை நீளமாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் மாற்ற காபியை பல வழிகளில் பயன்படுத்தலாம்.

 

 

3/7
காபி பொடி மருதாணி
காபி பொடி மருதாணி

சூடான நீரில் 1 டீஸ்பூன் காபி தூள் சேர்த்து வடிகட்டி அதில் தேவையான மருதாணித் தூள் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இரண்டு மணி நேரம் ஊற வைத்து பின்னர் இந்த பேஸ்ட்டை தலைமுடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.

4/7
காபி பொடி ஸ்பிரே
காபி பொடி ஸ்பிரே

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் பிரிஞ்சி இலையை நறுக்கி சேர்த்து நன்கு கொதிக்கவைத்து, அதில் கிராம்பு சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து வடிகடவும். பின்னர் இதில் காபி பொடி சேர்த்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். நரை முடி இருக்கும் இடத்தில் தொடர்ந்து ஸ்பிரே செய்து வந்தால் முடி கருப்பாக மாறும்.

 

5/7
காபி பொடி மற்றும் தேங்காய் எண்ணெய்
காபி பொடி மற்றும் தேங்காய் எண்ணெய்

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க காபி பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் காபி தூள் சேர்த்து முடியில் தடவவும். சிறிது நேரம் மசாஜ் செய்து ஷாம்பூவைப் பயன்படுத்தி முடியை சுத்தம் செய்யவும்.

6/7
காபி பொடி மற்றும் கற்றாழை
காபி பொடி மற்றும் கற்றாழை

காபி பொடி மற்றும் கற்றாழை முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும. இதற்கு ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு ஸ்பூன் காபி பொடி எடுத்துக்கொண்டு இரண்டையும் கலக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை முடியிலும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்பூ போட்டு கழுவவும்.

7/7
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

 





Read More