PHOTOS

கேரளா பேய் கோயில் பற்றிய சுவாரஸ்ய தகவல்..!

கேரளாவின் பேய் கோயில் என்றால் அது சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில் தான்.

 

...
Advertisement
1/8

கேரளாவில் கொச்சின் மற்றும் எர்ணாகுளம் ஆகிய நகரங்களுக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கும் கோயில் தான் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில். இங்கு அம்மன் மூன்று உருவங்களில் காட்சியளிக்கிறார். காலையில் வெள்ளை உடை அணிந்து சரஸ்வதி ரூபத்திலும், மதியம் மகாலட்சுமியாக சிவப்பு உடையிலும், இரவு  கரும் நீல வண்ணத்தில் துர்க்கையாகவும் காட்சியளிக்கிறார். 

2/8

உட்பிராகாரத்தில் வடகிழக்கில் மேற்கே பார்த்தவாறு தர்மசாஸ்தா திருச்சன்னதி உள்ளது. இவர் சன்னதிக்கு முன்தான் பேய், பிசாசு பிடித்தவர்கள் கட்டுப்படுத்தப்படுகிறார். அவர்கள் பல்வேறு விதமான அமானுஷ்ய கூச்சலிட்டும், ஆக்ரோசமாகவும் செயல்படுகின்றனர். 

3/8

அப்போது, அங்கிருக்கும் நம்பூதிரி தோற்றம் கொண்ட ஒருவர் பேய் பிடித்தவர்களை சில மந்திரங்களின் மூலம் தன் கட்டுக்குள் கொண்டு வருகிறார். அதற்கு அடையாளமாக சன்னதிக்கு முன்னுள்ள தூண் ஒன்றில் ஆணிகள் அடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

4/8

மூல சன்னதியில் நிலவும் மாபெரும் சக்தியானது, பேய்களை போன்ற ஆத்மா சாந்தியடையாதவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைத்து, மெள்ள மெள்ள, விரட்டியடிக்கும் அதிசயத்தைக் கண்ணால் காண முடிகிறது. 

5/8

சித்த சுவாதீனம் இல்லாதவர்கள், பேய் பிசாசு பிடித்தவர்கள், பில்லி, சூனியம் முதலிய உபத்திரவங்களுக்கு ஆளானவர்களை அதிகளவில் இத்தலத்தில் காணலாம். பகவதி கோவிலில் இருந்து சிறிது தூரத்தில் கீழ்க்காவு பத்ரகாளி கோவில் அமைந்துள்ளது. 

 

6/8

பத்ரகாளி, பகவதியை நோக்கியவாறு அமர்ந்திருக்கிறாள். பகவதி தரிசனம் முடிந்ததும், மக்கள் நேரே கீழ்க்காவு காளி கோவிலுக்குச் சென்று தரிசித்துவிட்டு வருகிறார்கள். தினமும் பகவதி சன்னதி திறந்த பிறகுதான் கீழ்க்காவு சன்னதி திறக்கப்படுகிறது. 

 

7/8

இரவு பகவதி சன்னதி மூடிய பிறகு, இங்கு குருதி தர்ப்பணம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அதன் பிறகே நடை அடைக்கப்படுகிறது. முன்பு இங்கு ஆடு, கோழி பலியிடப்பட்டு வந்ததற்கு அடையாளமாகக் காலையில் குருதி பூஜையும், இரவில் குருதி சமர்ப்பணமும் நடைபெற்று வருகின்றன.

 

8/8

மனநிலை பாதிக்கப்பட்டவர்களை இந்த ஆலயத்துக்கு அழைத்துவந்து வழிபட்டால், அவர் நல்ல மனநிலையை அடைவதை அன்றாடம் கண்கூடாகப் பார்க்கலாம். நோயின் தன்மையைப் பொறுத்து இங்கு சில நாள்கள் தங்கி வழிபட்டுச் செல்பவர்களும் உண்டு. 





Read More