PHOTOS

இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக்கை எதிர்பார்க்கும் சீனியர் பிளேயர் - வாய்ப்பு கிடைக்குமா?

்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட சீனியர் பிளேயர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் இடம் கி...

Advertisement
1/10

செப்டம்பர் மாதம் இந்தியா வரும் வங்கதேச கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட 20 மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது.

2/10

கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடரில் மீண்டும் கம்பேக்கை எதிர்பார்த்து காத்திருக்கிறார் இந்திய அணியின் சீனியர் பிளேயர் சட்டேஸ்வர் புஜாரா.

3/10

புஜாரா கடந்தமுறை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சிறப்பாக ஆடாததால் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து புஜாரா மீண்டும் இந்திய அணிக்காக விளையாட தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

 

4/10

ஐபிஎல் தொடரின்போது கூட இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினார். அடுத்தடுத்து சதங்களை அடித்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கவனத்தையும் பெற்றார். 

5/10

இந்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்திய புஜாரா சவுராஷ்டிரா அணிக்காக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாகவும் இருந்தார். இதனால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து இருக்கிறார்.

6/10

ஆனால், அவருக்கான வாய்ப்பு இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரின் கைகளில் தான் இருக்கிறது. வங்கதேச தொடருக்கு இந்திய தேர்வுக்குழு பிளேயர்களை தேர்வு செய்யும்போது சட்டேஷ்வர் புஜாரா பெயரும் பரிசீலிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

7/10

அப்போது கேப்டன் ரோகித், பயிற்சியாளர் கம்பீர் கிரீன் சிக்னல் கொடுத்தால் புஜாரா மீண்டும் ஒருமுறை இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான அணியில் இடம் கிடைப்பதும் உறுதியாக வாய்ப்பு இருக்கிறது. 

8/10

இந்திய கிரிக்கெட் அணிக்காக பல டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடிய புஜாரா இதுவரை 19 சதங்கள் மற்றும் 35 அரை சதங்கள் அடித்துள்ளார். 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 7195 ரன்கள் குவித்துள்ளார். இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் ரன் எடுத்தவர்களில் 8வது இடத்தையும் பிடித்திருக்கிறார்.

9/10

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியுடன் இணைந்து பல மேட்ச் வின்னிங்ஸ்களை விளையாடியுள்ளார். புஜாரா மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பினால், டெஸ்ட் ரன்களில் சவுரவ் கங்குலியை விட இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை படைக்க வாய்ப்பு இருக்கிறது. 

 

10/10

கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 7212 ரன்கள் எடுத்துள்ளார். புஜாரா இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 7195 ரன்கள் எடுத்துள்ளார். அவர் இன்னும் 18 ரன்கள் எடுத்தால் இந்த சாதனையை அவர் படைப்பார். இருப்பினும் இதெல்லாம் கம்பீர், ரோகித் வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே புஜராவுக்கு சாத்தியமாகும். 

 





Read More