PHOTOS

குக் வித் கோமாளியில் இருந்து விலகிய நடுவர்! வேறு சேனலுக்கு செல்கிறாரா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்த வெங்கடேஷ் பட் 5வது சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

...
Advertisement
1/5
venkatesh bhat
venkatesh bhat

விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நிறைய வரவேற்பு உள்ளது.  அதில் இருந்து தான் புகழ் போன்றவர்கள் சினிமாவிற்கு வந்துள்ளனர். 

 

2/5
venkatesh bhat
venkatesh bhat

தற்போது வரை நான்கு சீசன்கள் முடிவடைந்து உள்ளது.  அடுத்ததாக 5வது சீசன் துவங்க உள்ளது.  இந்த சீசனில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.  

 

3/5
குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி

இந்த குக் வித் கோமாளியில் செஃப் தாமு, வெங்கடேஷ் பட் ஆகியோர் அனைத்து சீசன்களிலும் நடுவர்களாக இருந்து வருகின்றனர்.  தங்களை கலாய்த்தாலும் அதனை பொருட்படுத்தாமல் நகைச்சுவையாக இந்த நிகழ்ச்சியை கொண்டு சென்றனர்.  இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.  

 

4/5
குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி

இந்நிலையில், குக் வித் கோமாளியின் 5வது சீசனில் இருந்து விலகுவதாக வெங்கடேஷ் பட் அறிவித்து உள்ளார்.  இந்த திடீர் அறிவிப்பால் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

 

5/5
குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி

எனக்கு வேறொரு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது, அது என்ன என்பதை விரைவில் அறிவிக்கிறேன் என்று இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், வெங்கடேஷ் பட் வேறு சேனலில் சேர்ந்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.





Read More