PHOTOS

Personal loan: மலிவான தனிநபர் கடன் கொடுக்கும் வங்கி எது? வட்டி விகிதம் & கட்டணங்கள்!

nd Personal Loan EMIs : திடீரென்று ஏற்படும் பணத் தேவைகளின்போது தனிநபர் கடன் எனப்படும் பர்சனல் லோன்கள் நல்ல விருப்பமாக இரு...

Advertisement
1/7
தனிநபர் கடன்
தனிநபர் கடன்

மக்களின் அவசரத் தேவைகளுக்காக தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. எந்தவிதமான பிணையமோ உத்தரவாதமோ இல்லாமல் கிடைக்கும் கடனை வாங்க குறைந்தபட்ச ஆவணங்கள் தேவை என்பதும், இந்த கடனை எந்த நிதி தேவைக்கும் பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது

2/7
இஎம்ஐ
இஎம்ஐ

தனிநபர் கடனும் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி திருப்பிச் செலுத்தப்படுகிறது. தனிநபர் கடன்கள் இஎம்ஐ அதாவது மாதாந்திர தவணைகளில் திருப்பிச் செலுத்தப்படுகிறது. 

3/7
HDFC கடன்
HDFC கடன்

HDFC வங்கி 10.50%  வட்டியில் தனிநபர் கடனைத் தருகிறது. ஐந்தாண்டு காலகட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாத இஎம்ஐ 2,149 ரூபாயாக இருக்கும். இந்த கடனுக்கு செயலாக்கக் கட்டணம் ரூ.4,999 வரை இருக்கலாம்...  

4/7
டாடா கேபிடல்
டாடா கேபிடல்

டாடா கேபிடல், 10.99%  வட்டியில் தனிநபர் கடனைத் தருகிறது. ஐந்தாண்டு காலகட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாத இஎம்ஐ 2,174 ரூபாயாக இருக்கும். இந்த கடனுக்கு செயலாக்கக் கட்டணம் 5.5% வரை இருக்கலாம்...  

5/7
ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா

ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா, 11.15% முதல் 15.30% வரையிலான வட்டியில் தனிநபர் கடனைத் தருகிறது. ஐந்தாண்டு காலகட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாத இஎம்ஐ 2,182-2,395 ரூபாயாக இருக்கும். பாரத ஸ்டேட் வங்கி செயலாக்கக் கட்டணம் வசூலிப்பதில்லை  

6/7
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி 10.80% வட்டியில் தனிநபர் கடனைத் தருகிறது. ஐந்தாண்டு காலகட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாத இஎம்ஐ 2,164 ரூபாயாக இருக்கும். இந்த கடனுக்கு செயலாக்கக் கட்டணம் 2.50% வரை இருக்கலாம்...  

7/7
பேங்க் ஆஃப் பரோடா
பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா 11.05% முதல் 18.75% வரை வட்டியில் கடன் வழங்குகிறது. மாதாந்திர தவணையாக 2,177 ரூபாய் முதல் 2,580 வரை கட்ட வேண்டியிருக்கும். செயலாக்கக் கட்டணம் 2% வரை (குறைந்தபட்சம் ரூ. 1,000 மற்றும் அதிகபட்சம் ரூ. 10,000) இருக்கலாம்





Read More