PHOTOS

நாகசதுர்த்தியில் பாம்புக்கு இடுப்பில் அரண் கொடுத்த விநாயகருக்கு ஆடி வளர்பிறை சதுர்த்தி விரதம்!

2024 : விநாயகருக்கு மிகவும் உகந்த சதுர்த்தி திதியன்று விரதம் இருந்து வழிபடுவது கோடி நன்மைக் கொடுத்து குலத்தை காக்கும். ஆடி மா...

Advertisement
1/8
ஆடி சதுர்த்தி
ஆடி சதுர்த்தி

சதுர்த்தி என்றதும் பொதுவாக அனைவருக்கும் விநாயகரே நினைவுக்கு வருவார். மாதந்தோறும் விநாயக சதுர்த்தி விரதம் இருப்பது வழக்கம் என்பதால், சதுர்த்தி என்பதே கணபதியுடன் இணைந்த விரதமாக மாறிவிட்டது. ஆனால், ஆடி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தியை நாம் நாகசதுர்த்தி என்று கூறுகிறோம்.  அது ஏன் தெரியுமா?

2/8
நாக சதுர்த்தி
நாக சதுர்த்தி

விநாயகர் தன்னுடைய இடுப்பில் நாகத்தை அரணாக கட்டியிருப்பார். எந்த தெய்வத்தை வழிபட்டாலும், அதற்கு முன்னதாக விநாயகரை வழிபடுவது நமது மரபு. அதேபோல், நாகசதுர்த்தி தினத்தன்று விநாயகரை வழிபட்டாலே நாகங்களையும் வழிபடும் வந்து சேரும்  

3/8
நாகதோஷம்
நாகதோஷம்

ஆடி மாதத்தில் வரக்கூடிய நாகசதுர்த்தி நாளன்று நாகங்களை வழிபாடு செய்வதன் மூலம் நாகத்தால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். 

4/8
நாகதேவதை
நாகதேவதை

நாகசதுர்த்தி நாளன்று, வழக்கம் போல விநாயகர் வழிபாடு செய்வது அவசியம். அதனுடன் சேர்த்து நாகதேவதைகளையும் வழிபட வேண்டும்

5/8
நாகசதுர்த்தி மந்திரம்
நாகசதுர்த்தி மந்திரம்

நாகசதுர்த்தி என்று ராகு காலத்தில் வழிபாடு செய்வதால் நாகதோஷங்கள் நீங்கும்

6/8
நாகதோஷங்கள்
நாகதோஷங்கள்

நாகசதுர்த்தி அன்று நாகதேவதைகளுக்கு உரிய மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.  கால சர்ப்பதோஷம் நீங்கும், நாக தோஷம், நாகசாபம் ஆகியவற்றை நீக்கும் மந்திரம் இது  

7/8
நாகதேவதைகளின் மூல மந்திரம்
நாகதேவதைகளின் மூல மந்திரம்

நாகதேவதைகளின் மூல மந்திரம்

சர்ப்பங்களின் தலைவனே, பேரொளியை கொண்ட நாகமணியை வைத்திருக்கும் நாக தேவனே எங்களையும் எங்கள் குலத்தையும் காத்தருள் வாயாக என்ற பொருள் தரும்

ஓம் ஸர்ப்ப ராஜாய வித்மஹே! நாகமணி சேகராய தீமஹி! தந்நோ நாகேந்த்ர ப்ரசோதயாத்!!

மந்திரத்தை 27 முறை ராகுகாலத்தில் சொல்லி நாகருக்கு பாலூற்றி வேண்டுதல்களை வைக்கலாம்  

8/8
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது





Read More