PHOTOS

BSNL வழங்கும் அசத்தல் பிராட்பேண்ட் ஆஃபர்... ராக்கெட் வேகத்தில் 3300 GB டேட்டா...!

த்தில் சிறந்த திட்டங்கள் பல சிறப்பான திட்டங்களை வழங்குகிறது. அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அதன் உள்கட்டமை...

Advertisement
1/9
பிஎஸ்என்எல் 4ஜி சேவை
பிஎஸ்என்எல் 4ஜி சேவை

பிஎஸ்என்எல் 4ஜி சேவை: BSNL நிறுவனம் 4ஜி மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை  மேம்படுத்த துரித கதியில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  உள்நாட்டு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உபகரணங்களைப் பயன்படுத்தி வரும் பிஎஸ்என்எல், நாட்டில் சுமார் 15000+ 4ஜி டவர்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாக சமீபத்தில் குறிப்பிட்டது.

2/9
பிஎஸ்என்எல் மழைக்கால சலுகை
பிஎஸ்என்எல் மழைக்கால சலுகை

பிஎஸ்என்எல் மழைக்கால சலுகை: நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் இணைய பிராட்பேண்ட் பயனர்களுக்கு BSNL Monsoon Bonanza என்னும் பருவ கால சலுகையை அறிவித்துள்ளது. இதில் பயனர்களுக்கு மலிவான விலையில் 3300GB அதிவேக டேட்டா திட்டம் வழங்கப்படுகிறது. 

3/9
BSNL பிராட்பேண்ட் சேவை
BSNL பிராட்பேண்ட் சேவை

BSNL பிராட்பேண்ட் சேவை: பிஎஸ்என்எல் அறிவித்துள்ள சலுகையின் கீழ் தனது பிராட்பேண்ட் திட்டத்தின் கட்டணத்தை ரூ.100 குறைத்துள்ளது. பயனர்கள் இப்போது ரூ.499 பிராட்பேண்ட் திட்டத்திற்கு ரூ.399 செலுத்தினால் போதும்.

4/9
BSNL பிராட்பேண்ட் திட்டம்
BSNL பிராட்பேண்ட் திட்டம்

BSNL பிராட்பேண்ட் திட்டம்: BSNL வழங்கும் இந்த பிராட்பேண்ட் திட்டத்தில், பயனர்களுக்கு மொத்தம் 3,300GB டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் கால் வசதியும்கிடைக்கிறது. 

5/9
அதிவேக பிராட்பேண்ட் சேவை
அதிவேக பிராட்பேண்ட் சேவை

அதிவேக பிராட்பேண்ட் சேவை: BSNL வழங்கும் இந்த பிராட்பேண்ட் திட்டத்தில், பயனர்களுக்கு 60Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படும். டேட்டா வரம்பு கடந்த பிறகு, இணைய வேகம் 4Mbps ஆக குறையும்.

6/9
புதிய வாடிக்கையாளர்களுக்கு சலுகை திட்டம்
புதிய வாடிக்கையாளர்களுக்கு சலுகை திட்டம்

புதிய வாடிக்கையாளர்களுக்கு சலுகை திட்டம்: BSNL வழங்கும் இந்த சலுகை புதிய பிராட்பேண்ட் பயனர்களுக்கானது. பாரத் ஃபைபர் பிராட்பேண்டின் புதிய சேவையைப் பெறும் பயனர்கள், முதல் 3 மாதத்திற்கு வெறும் 399 ரூபாய் செலுத்தினால் போதும். இதன் பிறகு திட்டத்தின் கட்டணம் ரூ.499 ஆக இருக்கும். 

7/9
சலுகையை பெறும் வழிமுறை
சலுகையை பெறும் வழிமுறை

சலுகையை பெறும் வழிமுறை: பயனர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும், பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப் மற்றும் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் மூலமாகவும் இந்தச் சலுகையைப் பெறலாம்.

8/9
BSNL-ன் புதிய ஹெல்ப்லைன் சேவை
BSNL-ன் புதிய ஹெல்ப்லைன் சேவை

BSNL-ன் புதிய ஹெல்ப்லைன் சேவை: பிஎஸ்என்எல் சமீபத்தில் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவையையும் தொடங்கியுள்ளது. இதில், பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப்பிற்குச் சென்று 1800 4444 என்ற ஹெல்ப்லைன் எண்ணுக்கு ஹாய் என்று எழுதி மெசேஜ் அனுப்பி பல சேவைகளை பெறலாம். 

9/9
ஹெல்ப்லைன் சேவை மூலம் கிடைக்கும் வசதிகள்
ஹெல்ப்லைன் சேவை மூலம் கிடைக்கும் வசதிகள்

ஹெல்ப்லைன் சேவை மூலம் கிடைக்கும் வசதிகள்: பயனர்கள் BSNLவழங்கும் புதிய திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுதல், பில் செலுத்துதல், திட்டத்தை மேம்படுத்துதல் போன்ற வசதிகளைப் பெறலாம். வாட்ஸ் மூலம் கிடைக்கும் ஆப்ஷன்களை பயன்படுத்தி தேவையான சேவைகளை பெறலாம்.





Read More