PHOTOS

ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் 15,000+ 4G டவர்கள்... அதிரடி காட்டும் BSNL நிறுவனம்

, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொடை தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை உயத்திய நிலையில், பலர் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி படையெடுத்து வருகின்...

Advertisement
1/9
நாடு முழுவதும் 4G சேவை:
நாடு முழுவதும் 4G சேவை:

நாடு முழுவதும் 4G சேவை: பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தனது 4G சேவையை பல மாநிலங்களில் தொடங்கியுள்ள நிலையில், இப்போது நாடு முழுவதும் மிக வேகமாக இணையத்தை வழங்க தயாராகி வருகிறது. BSNL நாடு முழுவதும் 4G சேவையை விரிவுபடுத்துகிறது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக 5G தொழில்நுட்பத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளது. 

2/9
BSNL 5ஜி நெட்வொர்க் பரிசோதனை
BSNL 5ஜி நெட்வொர்க் பரிசோதனை

BSNL 5ஜி நெட்வொர்க் பரிசோதனை: மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா BSNL 5ஜி நெட்வொர்க் பரிசோதனையில்,  வீடியோ கால் சேவை பரிசோதித்துப் பார்த்தது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.

3/9
15 ஆயிரம்+ 4ஜி டவர்கள்
15 ஆயிரம்+ 4ஜி டவர்கள்

15 ஆயிரம்+ 4ஜி டவர்கள் : 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்தின் கீழ் 15 ஆயிரம்+ 4ஜி டவர்கள்  அமைக்கபப்ட்டுள்ளதாக கூறியுள்ள பிஎஸ்என்எல், நாடு முழுவதும் தடையில்லா இணையத்தை வழங்கும் முயற்சி இது என தெரிவித்துள்ளது. 

4/9
ஆத்மநிர்பர் பாரத்' திட்டம்
ஆத்மநிர்பர் பாரத்' திட்டம்

ஆத்மநிர்பர் பாரத்' திட்டம்: BSNL இன் 4G நெட்வொர்க் முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்தின் கீழ், இந்த மொபைல் டவர்களில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து உபகரணங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

5/9
BSNL 5G தொழில்நுட்பம்
 BSNL 5G தொழில்நுட்பம்

BSNL நாடு முழுவதும் 4G சேவையை விரிவுபடுத்தும் நிலையில், தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக 5G தொழில்நுட்பத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளது, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. 

6/9
பிஎஸ்என்எல் 4ஜி சேவை
பிஎஸ்என்எல் 4ஜி  சேவை

பிஎஸ்என்எல் 4ஜி  சேவை: நாடு முழுவதும் 4ஜி சேவையை விரிவுபடுத்த, 1 லட்சத்திற்கும் அதிகமான டவர்கள் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிஎஸ்என்எல்   நிறுவனம் கூறியுள்ளது. 

7/9
1 லட்சம்+ 4ஜி டவர்கள்
1 லட்சம்+ 4ஜி டவர்கள்

1 லட்சம்+ 4ஜி டவர்கள்: இலக்கு நிர்ணயிக்கப்படுள்ள 1 லட்சத்திற்கும் அதிகமான டவர்களில் சுமார் 80,000 டவர்கள் அக்டோபர் இறுதிக்குள் நிறுவப்படும் என்றும் ,  21,000 டவர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறுவப்படும் என்றும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். 

8/9
டவுன்லோட் வேகம் அதிகரிக்கும்
டவுன்லோட் வேகம் அதிகரிக்கும்

மார்ச் 2025க்குள் மொத்தம் ஒரு லட்சம் டவர்கள் 4ஜி நெட்வொர்க்கிற்கு தயாராகிவிடும் நிலையில், இணையத்தில் மேற்கொள்ளப்படும் டவுன்லோட் வேகம் அதிகரிக்கும் என்றும், டிவி பார்க்கும் அனுபவமும் சிறப்பாக இருக்கும் என்றும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மேலும் கூறினார்.

9/9
BSNL 5G சேவை
BSNL 5G சேவை

BSNL 5G சேவை: BSNL நிறுவனம் தனது 5G சேவைகளை சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா  போன்ற முக்கிய பெருநகரங்களில் விரைந்து தொடங்க திட்டமிட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.





Read More