PHOTOS

IND vs AUS 3rd Test: இந்தூரில் தெறிக்க விட காத்திருக்கும் இந்திய அணி... முக்கிய தகவல்கள் இதோ!

- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் நாளை (ம...

Advertisement
1/5

WTC Final:இந்த போட்டியை வென்றால், இந்தியா தொடரை வெல்லுவது மட்டுமின்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக தகுதிபெறும். இந்த போட்டியை வெல்ல, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டது. 

 

 

2/5

IND vs AUS, India's Playing XI: இரண்டு போட்டிகளில் விளையாடிய இந்திய அணியின் பிளேயிங் லெவனுக்கும் நாளை போட்டியின் பிளேயிங் லெவனுக்கும் பெரிதும் மாற்றம் இருக்காது என்றே கூறப்படுகிறது. இருப்பினும், தொடக்க வீரரான கே.எல். ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

3/5

IND vs AUS, Virat Kohli: இந்த போட்டியில், விராட் கோலி 77 ரன்களை சேர்த்தால், உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களை கடந்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் - ரோஹித் இணை வெறும் 44 ரன்களை எடுத்தால், டெஸ்ட் அணியில் இந்த ஜோடி 1000 ரன்களை கடக்கும். 

 

4/5

IND vs AUS, Steve Smith: ஆஸி., அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், தனிப்பட்ட காரணமாக நாடு திரும்பியுள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் அடுத்தடுத்த போட்டிகளில் கேப்டனாக செயல்படுவார். வார்னர், ரென்ஷா, பாட் கம்மின்ஸூக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க், போலாண்ட், கேம்ரூன் கிரீன் ஆகியோர் நாளைய போட்டியில் விளையாட வாய்ப்பளிக்கப்படலாம். 

 

5/5

IND vs AUS, Streaming Details: இந்தியா ஆஸ்திரேலியா தொடரை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. DD Sports சேனலிலும் நீங்கள் நேரடி ஒளிபரப்பை காணலாம். மேலும், Disney+ Hotstar ஓடிடியில் சந்தா கொடுத்தும் நேரலையில் பார்க்கலாம். 





Read More