PHOTOS

Big News: ஆப்பிள் நிறுவனத்தின் இந்த model மொபைல் போன் உற்பத்தி நிறுத்தப்படலாம்

(iPhone 12 mini) மாடலின் உற்பத்தியை நிறுத்தக்கூடும்: ஆப்பிள் தனது ஐபோன் தொடரான  iPhone 13 த...

Advertisement
1/5
புதிய தொடர்களை செப்டம்பரில் தொடங்கலாம்
புதிய தொடர்களை செப்டம்பரில் தொடங்கலாம்

ஆப்பிள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஐபோன் 13 தொடரை அறிமுகப்படுத்தக்கூடும். இதற்கு முன், நிறுவனம் ஐபோன் 12 மினி உற்பத்தியை நிறுத்தும். இந்த தொலைபேசியின் தேவையும் மிகக் குறைவாக இருப்பதால்  நிறுவனம் இந்த முடிவை எடுக்கப் போகிறது.

2/5
உற்பத்தி நிறுத்தம்
உற்பத்தி நிறுத்தம்

ஆப்பிள் ஐபோன் 12 மினியை குறிப்பாக இந்திய சந்தைக்காக அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இந்த தொலைபேசியைப் பற்றி நிறைய விவாதங்கள் நடதேறின. 5 ஜி தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐபோன், இது உலகிலேயே மிகவும் சிறிய மற்றும் எடை குறைவான மொபைலாக இருந்தது. ஆனால் இந்த ஐபோன், பயனர்களை அதிகம் ஈர்க்கவில்லை. எனவே விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெறவில்லை. எனவே, ஆப்பிள் நிறுவனம் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது.

3/5
இதுதான் விலை
இதுதான் விலை

ஆப்பிள் ஐபோன் 12 மினியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் மினி 5.4 மற்றும் 6.1 இன்ச் திரை அளவு வகைகளுடன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகின் மெலிதான, சிறிய மற்றும் வேகமான 5 ஜி ஸ்மார்ட்போன் என்று ஆப்பிள் கூறுகிறது. இது ஐபோன் 12 ஐப் போன்ற செயலியைக் கொண்டிருக்கும் மற்றும் அனைத்து அம்சங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். இந்தியாவில் ஐபோன் 12 மினியின் விலை 66900 ரூபாய் ஆகும்.

4/5
ஐபோன் 12 மினி
ஐபோன் 12 மினி

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 மினி தயாரிப்பை நிறுத்தப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபோன் 12 சீரிஸ் போன் நான்கு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த மாடலுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால், அது நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

5/5
ஐபோன் 12
ஐபோன் 12

ஆப்பிள் விரைவில் ஐபோன் 12 மினி (iPhone 12 mini) மாடலின் உற்பத்தியை நிறுத்தக்கூடும்: ஆப்பிள் தனது ஐபோன் தொடரான  iPhone 13 தொடரை இந்த ஆண்டு தொடங்க தயாராகி வருகிறது. 





Read More