PHOTOS

மோடி 3.0: மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை

ேரண்டி என உறுதியளிக்கப்பட்ட அனைத்தும் ஒவ்வொன்றாக நடத்தப்படும் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். தேர்தலுக்கு முந்தைய தேர்தல் அறிக்கையில்...

Advertisement
1/8
ஆயுஷ்மான் பாரத் திட்டம்
ஆயுஷ்மான் பாரத் திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாளை பிரதமராக பதவியேற்க உள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை 07:15 மணிக்கு நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்கிறார். நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமையவுள்ள இந்த வேளையில், பாஜக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மக்களின் மனதில் இருக்கும். தேர்தலுக்கு முந்தைய தேர்தல் அறிக்கையில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. மூத்த குடிமக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2/8
ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்றால் என்ன
ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்றால் என்ன

ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் (Ayushman Bharat Yojana) முழுப் பெயர் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா. இந்த திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரை பணமில்லா சிகிச்சை வசதி கிடைக்கும். இதில், மருந்துகள், சிகிச்சை போன்றவற்றுக்கான செலவை அரசே ஏற்கிறது. இந்த திட்டம் சுகாதார அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. இதுவரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலன்கள் பிபிஎல் பிரிவின் கீழ் வரும் நலிந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மூத்த குடிமக்களும் இத்திட்டத்தின் கீழ் வந்தால், அவர்கள் பெரும் பலன்களைப் பெறுவார்கள்.

3/8
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பதிவு செய்வது எப்படி
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பதிவு செய்வது எப்படி

இத்திட்டத்தின் கீழ் வருபவர்கள், இதன் பயன்களைப் பெற தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்வதற்கு, நீங்கள் அருகிலுள்ள அடல் சேவா மையம் அல்லது ஜன் சேவா மையத்திற்குச் சென்று உங்களின் அனைத்து அசல் ஆவணங்களின் நகல்/புகைப்பட நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு, அந்த நகல்களை பொது சேவை மையத்தின் அசல் ஆவணங்களுடன் சரிபார்க்க வேண்டும். 

4/8
ஜன் சேவா மையம்
ஜன் சேவா மையம்

அதன் பிறகு உங்களுக்கு ஒரு பதிவு எண் வழங்கப்படும். பதிவுசெய்த 10 முதல் 15 நாட்களுக்குப் பிறகு, ஜன் சேவா மையத்திலிருந்து தங்க அட்டை, அதாவது கோல்டன் கார்டைப் பெறுவீர்கள். அதன் பிறகு நீங்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

5/8
உங்கள் நகரத்தில் உள்ள மருத்துவமனைகளின் பட்டியலை இப்படி தெரிந்துகொள்ளலாம்
உங்கள் நகரத்தில் உள்ள மருத்துவமனைகளின் பட்டியலை இப்படி தெரிந்துகொள்ளலாம்

ஆயுஷ்மான் மொபைல் செயலியின் உதவியுடன், திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகளின் பட்டியலை நீங்கள் பார்க்கலாம். இதற்கு முதலில் கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று ஆயுஷ்மான் பாரத் PM-JAY செயலியை போனில் இன்ஸ்டால் செய்யவும்.

6/8
ஆயுஷ்மான் பாரத் செயலி
ஆயுஷ்மான் பாரத் செயலி

செயலியைத் திறக்கும்போது, ​​ஆயுஷ்மான் யோஜனா செயலியில் கிடைக்கும் பல சேவைகள் தெரியும். அங்கிருந்து Find Empaneled Hospitals என்பதைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, மாநிலத்தின் பெயர், நகரத்தின் பெயர் மற்றும் சிகிச்சை தேவைப்படும் நோய்த் துறை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும். உதாரணமாக, நுரையீரல் நோயாளிகளின் சிகிச்சைக்கு நுரையீரல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

7/8
ஆயுஷ்மான் பாரத் செயலி
ஆயுஷ்மான் பாரத் செயலி

இதற்குப் பிறகு, Search என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்யவும். இதற்குப் பிறகு, நீங்கள் தேடிய நோய் தொடர்பான மாநிலம், நகரம் மற்றும் மருத்துவமனைகளின் பட்டியல் கூகுள் மேப்பில் தோன்றத் தொடங்கும்.இந்த மருத்துவமனைகள் சிவப்பு அடையாளங்களாகத் தெரியும். நீங்கள் எந்த மருத்துவமனையில் கிளிக் செய்தாலும், அதன் பெயர் மற்றும் முகவரி உங்கள் முன் தோன்றும். 

8/8
ஆயுஷ்மான் பாரத் செயலி
ஆயுஷ்மான் பாரத் செயலி

இது தவிர, அழைப்பிற்கான பட்டனும் கீழே இருக்கும். இதைக் கிளிக் செய்து நீங்கள் நேரடியாக மருத்துவமனைக்கும் பேசலாம். மருத்துவமனையில் பேசி உங்களுக்கு வேண்டிய விவரங்களை பெற்றிக்கொள்ளலாம்.





Read More