PHOTOS

அடாவடி கொழுப்பை அட்டகாசமாய் குறைக்கும் உணவுகள்: கண்டிப்பா தினமும் சாப்பிடுங்க

ல் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட...

Advertisement
1/12
கொலஸ்ட்ரால்
கொலஸ்ட்ரால்

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக இந்த நாட்களில் பலர் அதிக கொலஸ்ட்ராலால் அவதிப்படுகிறார்கள். கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது.  

2/12
உணவுகள்
உணவுகள்

தினமும் சமையலில் சேர்க்கும் சில எளிய உணவுகளை கொண்டே கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம். இவை நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்த உதவும் சில ஆரோக்கியமான, இயற்கையான எளிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.   

3/12
முழு தானியங்கள்
முழு தானியங்கள்

உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளவர்கள் அதை கட்டுப்படுத்த, முழு தானியங்களை உட்கொள்ளலாம். கினோவா, கோதுமை, தினை போன்ற முழு தானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும். இவற்றில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.

4/12
பாலக் கீரை
பாலக் கீரை

பாலக் கீரையில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஃபோலேட் ஆகியவை அதிகமாக உள்ளன. இது கொலஸ்ட்ரால் அதிகமாகி பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. கீரையில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தில் உள்ள கொழுப்புடன் பிணைக்கப்பட்டு, அதன் உறிஞ்சுதலைத் தடுத்து, எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.

5/12
வெந்தயம்
வெந்தயம்

கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் வெந்தயத்தை உட்கொள்ளலாம். வெந்தயம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கின்றது. இரவு ஊறவைத்து காலையில் அதன் நீரையும், வெந்தயத்தையும் உட்கொள்ளலாம். இதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருப்பதோடு இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கின்றது. 

6/12
கிரீன் டீ
கிரீன் டீ

கிரீன் டீ கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல் உடல் எடையை நிர்வகிப்பதிலும் உதவுகின்றது. எல்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடிக்கலாம்.

 

7/12
அவகேடோ
அவகேடோ

அவகேடோவில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இது கெட்ட எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கின்றது. அவகேடோவில் அதிகமாக உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் முக்கியமான ஊட்டச்சத்து. இரத்த அழுத்தம் அதிக கொலஸ்ட்ரால் அளவுகளுக்கு முக்கிய பங்களிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

8/12
பூண்டு
பூண்டு

தினமும் உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வது எல்டிஎல் கொழுப்பின் (LDL Cholesterol) அளவைக் குறைக்கும். பூண்டை பல வகைகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பூண்டில் உள்ள ஆரோக்கிய நன்மைகளால் பல வித உடல் உபாதைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும். 

9/12
பரட்டைக்கீரை
பரட்டைக்கீரை

கேல் என்றழைகப்படும் பரட்டைக்கீரை ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். இது இயற்கையான முறையில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆண்டிஆக்சிடெண்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இவை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும். 

10/12
கொண்டைக்கடலை
கொண்டைக்கடலை

கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் வேகவைத்த கொண்டைக்கடலையை உட்கொள்ளலாம். இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைகக் உதவுவதோடு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் உடலுக்கு அளிக்கின்றது. இது உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியையும் ஊட்டச்சத்தையும் அளிக்கின்றது. 

11/12
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. இது கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பதில் சிறப்பாக செயல்படும் ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். ப்ரோக்கோலியில் சல்ஃபோராபேன் என்ற கலவை உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் என்று கூறப்படுகின்றது. 

12/12
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.





Read More