PHOTOS

ஜாலியா சாப்பிடணும், எடையும் குறையணும்? அப்போ இந்த டயட் ஸ்னாக்ஸ் சாப்பிடுங்க.. உடனே குறையும்

Weight Loss Snacks : நம் உடல் எடை மிக எளிதாக மிக வேகமாக அதிகரித்து விடும். ஆனால் இதை குறைக்க தான் அதிக நேரம் எடுக்கும்.

...
Advertisement
1/8
எடை குறைப்பு
எடை குறைப்பு

எடை குறைப்பு: உடல் எடையை குறைப்பது எளிதான காரியம் அல்ல. பலர் பல வித முயற்சிகள் மூலம் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையாக உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுகிறார்கள்.

2/8
எடை குறைப்பு: எடை குறைப்பு தின்பண்டங்கள்
எடை குறைப்பு: எடை குறைப்பு தின்பண்டங்கள்

எடை குறைப்பு தின்பண்டங்கள்: இந்த பதிவில் 5 தனித்துவமான விஷயங்களை பற்றி காணலாம். இவற்றை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம், மிக எளிதாக உடல் எடையை குறைக்கலாம். 

3/8
எடை குறைப்பு: வறுத்த கொண்டைக்கடலை
எடை குறைப்பு: வறுத்த கொண்டைக்கடலை

வறுத்த கொண்டைக்கடலை: வறுத்த கொண்டைக்கடலை எடையைக் குறைப்பதில் பெரும் நன்மை பயக்கும். இதில் நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால், வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதோடு, அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்கிறது.  

4/8
எடை குறைப்பு: பாதாம்
எடை குறைப்பு: பாதாம்

பாதாம்: ஆரோக்கியமான தின்பண்டங்களில் பாதாம் முதலில் வருகிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். நீங்கள் ஊறவைத்த பாதாமை உட்கொண்டால், அது இன்னும் சிறந்த தேர்வாக இருக்கும்.

5/8
எடை குறைப்பு: பெர்ரி மற்றும் க்ரீக் யோகர்ட்
எடை குறைப்பு: பெர்ரி மற்றும் க்ரீக் யோகர்ட்

பெர்ரி மற்றும் க்ரீக் யோகர்ட் : க்ரீக் யோகர்ட் மற்றும் பெர்ரிகளை உங்கள் உணவில் சேர்த்தாலும், அது உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது. தயிரில் புரதம் மற்றும் கால்சியம் நல்ல அளவில் காணப்படுகின்றன மற்றும் பெர்ரிகளில் ஆண்டி ஆக்சிடெண்டுகள், தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் பசியைக் குறைக்க உதவும்.

6/8
எடை குறைப்பு: பீநட் பட்டர் மற்றும் ஆப்பிள்
எடை குறைப்பு: பீநட் பட்டர் மற்றும் ஆப்பிள்

பீநட் பட்டர் மற்றும் ஆப்பிள்: ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு. நீங்கள் பாதாம் அல்லது பீநட் பட்டருடன் ஆப்பிளை சாப்பிட்டால், ஆரோக்கியமான கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு சென்றடையும். இது அதிகப்படியான உணவைத் தடுத்து எடையைக் குறைக்கும்.

7/8
எடை குறைப்பு: அவித்த முட்டைகள்
எடை குறைப்பு: அவித்த முட்டைகள்

அவித்த முட்டைகள்: வேகவைத்த முட்டை ஒரு வசதியான மற்றும் புரதம் நிறைந்த சிற்றுண்டி ஆகும். அவை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, நீண்ட நேரம் முழுதாக உணர்வுடன் இருக்க வைக்கின்றன.

8/8
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  





Read More