PHOTOS

உடல் கொழுப்பை எரிக்க உதவும்... சிறந்த ப்ரோபயோடிக் உணவுகள்

மனை குறைக்க குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும். அதற்கு ப்ரோபயோடிக் உணவுகள் அவசியம். இவை செரிமானத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்...

Advertisement
1/9
ப்ரோபயோடிக் உணவுகள்
ப்ரோபயோடிக் உணவுகள்

ப்ரோபயோடிக் உணவுகள்: நொதிக்க வைக்கப்பட்டு, புளிக்க வைக்கப்பட்டு செய்யப்படும் உணவுகள், ப்ரோபயோடிக் உணவுகள் என அழைக்கப்படுகின்றன.  ஏனெனில், இவற்றில் குடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல பாக்டீரியா நிறைந்துள்ளது.

2/9
செரிமான பிரச்சினைகள்
செரிமான பிரச்சினைகள்

செரிமான பிரச்சினைகள்: ப்ரோபயோடிக் உணவுகள் செரிமானத்தை மேம்படுத்தி, குடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பாக்டீரியாவை அள்ளி வழங்குவதோடு செரிமான பிரச்சினைகள் அனைத்தையும் நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. செரிமான ஆரோக்கியமாக இல்லை என்றால் உடல் எடை என்ன செய்தாலும் குறையாது. 

3/9
குடல் ஆரோக்கியம்
குடல் ஆரோக்கியம்

குடல் ஆரோக்கியம்:  உடல் பருமனை குறைக்க  குடல் ஆரோக்கியம் மிக முக்கியம். செரிமான ஆரோக்கியமாக இல்லை என்றால் உடல் எடை என்ன செய்தாலும் குறையாது. அதோடு ஊட்டச்சத்து குறைபாடு நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

4/9
தயிர்
தயிர்

தயிர்: ப்ரோபயோடிக்  நிறைந்த சிறந்த உணவுகளில் ஒன்றான தயிர், வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கும் ஆற்றல் கொண்டது. தயிரை தினமும் உட்கொள்வதால், உடல் பருமன குறைவதோடு, ஒட்டு மொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

5/9
பழைய சாதம்
பழைய சாதம்

பழைய சாதம்: பழைய சாதத்தை போல், சிறந்த ப்ரோபயோடிக் உணவை பார்க்க இயலாது. தயிர் கலந்த பழைய சாதத்தை வெங்காயத்துடன் தொட்டு சாப்பிடும் பழகக்கத்தை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தது இதனால் தான்.

6/9
இட்லி
இட்லி

இட்லி: தென்னிந்திய பாரம்பரிய உணவான இட்லி சிறந்த ப்ரோபயோடிக் உணவுகளில் ஒன்று. அரிசிக்கு பதிலாக சிறு தானியங்களான, ராகி சாமை போன்றவற்றை பயன்படுத்தி செய்யும் இட்லி சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவு.

7/9
தோசை
தோசை

தோசை: தோசையும் சிறந்த பயோட்டிக் உணவு. அதிலும், சிறு தானியங்களை கொண்டு தயாரிக்கப்படும் தோசை எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது என்றால் மிகை இல்லை.

8/9
ஊறுகாய்
ஊறுகாய்

ஊறுகாய்: காய்கறிகளை நொதிக்க வைத்து தயாரிக்கப்படும் ஊறுகாய் செரிமானத்திற்கு உதவும் சிறந்த உணவாகும். எனினும் இதை மிக அளவோடு தான் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் சேர்க்கப்படும் அதிக அளவிலான உப்பு, உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடும்

9/9
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.





Read More