PHOTOS

கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கா? ஈசியா குறைக்க இதோ எளிய வீட்டு வைத்தியங்கள்

ல் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் அது பல தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதை கட்டு...

Advertisement
1/8
கொலஸ்ட்ரால்
கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது. பல வித உடல் கோளாறுகளுக்கு முக்கிய காரணமாக அமையும் கொலஸ்ட்ராலை இயற்கையான வழியில் கட்டுப்படுத்த உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம். 

2/8
பருப்பு வகைகள்
பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்: பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, ராஜ்மா, காராமணி போன்ற பருப்பு வகைகளில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது. இது உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை கரைக்க உதவுகின்றது. இவற்றைக் கொண்டு செய்யப்படும் காலை உணவுகளும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

3/8
ஓட்ஸ்
ஓட்ஸ்

ஓட்ஸ்: ஓட்ஸ் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட்டால், நாள் முழுவதும் நிறைவான உணர்வு இருக்கும். 

4/8
உலர் பழங்கள் மற்றும் விதைகள்
உலர் பழங்கள் மற்றும் விதைகள்

உலர் பழங்கள் மற்றும் விதைகள்: உலர் பழங்கள் மற்றும் விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.

5/8
பூண்டு
பூண்டு

பூண்டு: பூண்டில் உள்ள அலிசின் என்ற கலவை கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. பூண்டை பச்சையாகவும் சாப்பிடலாம், அல்லது பல்வேறு உணவுகளில் சேர்த்து சமைத்தும் உட்கொள்ளலாம். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. 

6/8
மஞ்சள்
மஞ்சள்

மஞ்சள்: மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது, இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மஞ்சளை பாலில் கலந்து குடிக்கலாம். உணவுகளை சமைக்கும்போதும் இதை அவற்றில் சேர்க்கலாம். மஞ்சளின் மூலம் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் அபாயத்தை பெரிய வகையில் குறைக்கலாம். 

7/8
கிரீன் டீ
கிரீன் டீ

கிரீன் டீ: க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுக்க உதவுகின்றன. தினமும் 2-3 கப் க்ரீன் டீ குடிப்பது அதிக கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.

8/8
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.





Read More