PHOTOS

சைவ உணவு பிரியர்களுக்கான புரோட்டீன் நிறைந்த ‘சில’ சூப்பர் உணவுகள்!

ுவது போல, புரதமும் ஆரோக்கியத்திற்கு அவசியம். உடலில் உள்ள செல்களை சீர் செய்து உடல் வளர்ச்சிக்கு புரதம் உதவுகிறது. இறைச்சி உணவுகளில்...

Advertisement
1/5
பன்னீர்
பன்னீர்

பன்னீர் புரோட்டின் நிறைந்த உணவுகளில் ஒன்றாலும். அதிலும், டோபு பன்னீரில் புரோட்டீன் மிகவும் அதிகமாக இருக்கும். 

2/5
முளைக்கட்டிய பாசி பயறு
முளைக்கட்டிய பாசி பயறு

பாசி பயறில் புரோட்டின் நிறைந்துள்ளது.  முளை கட்டிய பாசி பயறில் உங்களுக்கு இரட்டை புரதம் கிடைக்கும். இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதன் காரணமாக செரிமானம் சிறப்பாக இருக்கும்.

3/5
பருப்பு வகைகள்
பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் புரோட்டீன் நிறைந்துள்ளது. உளுந்து, வேர்க்கடலை ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் அதிக புரதச்சத்து கிடைக்கும். அவற்றை ஊறவைத்து முளை கட்டும் போது சத்துக்கள் இரு மடங்காகும்.

4/5
எள்
எள்

எள்ளில் புரதச்சத்து நிறைந்துள்ளது. ஒரு டீஸ்பூன் எள் சுமார் 3 கிராம் புரதத்தை வழங்குகிறது. ஊறவைத்த எள்ளை உட்கொள்வது புரதத்தை அதிகரிக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்துகிறது.

5/5
சோயா
சோயா

சோயாவில்  36 சதவீதம் முதல் 56 சதவீதம் வரை புரதச்சத்து உள்ளது. இது தவிர, இது ஃபோலேட், கால்சியம், நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.





Read More