PHOTOS

யூரிக் அமிலம் யூ-டர்ண் எடுக்க, மூட்டு வலி முடங்கிப்போக இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்

ம் என்பது பியூரின்கள் கொண்ட உணவுகள் உடைக்கப்படும் போது உருவாகும் அமிலம் ஆகும். நாம் உட...

Advertisement
1/8
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை: அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக்கொள்வது யூரிக் அமிலத்தைக் குறைப்பதிலும் நன்மை பயக்கும். இது நீரிழிவு நோய் மற்றும் எடை இழப்பிலும் உதவுகிறது.

2/8
இஞ்சி
இஞ்சி

இஞ்சி: இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. மூட்டு வலிக்கும் இதனால் நிவாரணம் கிடைக்கும். இது உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கலோரிகளையும் குறைக்கின்றது.

3/8
தயிர்
தயிர்

தயிர்: குறைந்த கொழுப்புள்ள தயிர் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். தயிரின் ப்ரோபயாடிக் பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு பல விதங்களில் நன்மை பயக்கும்.

4/8
வேப்பிலை
வேப்பிலை

வேப்பிலை: வேப்பிலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. யூரிக் அமிலம் உட்பட உடலில் இருந்து நச்சுகளை அகற்ற வேம்பு உதவுகிறது. வேப்பிலை, வேப்பம்பூ ஆகியவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. 

5/8
கொத்தமல்லி
கொத்தமல்லி

கொத்தமல்லி: கொத்தமல்லியை உட்கொள்வது சீரான சிறுநீர் கழித்தலை உறுதிபடுத்துகிறது. இது சரியான நேரத்தில் உடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது. ஆகையால் கொத்தமல்லியை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

6/8
மஞ்சள்
மஞ்சள்

மஞ்சள்: மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. இது அதிக யூரிக் அமில அளவுகளுடன் தொடர்புடைய வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவும்.  இது கீல்வாதத்தையும் குணப்படுத்தும்.

7/8
நெல்லிக்காய்
நெல்லிக்காய்

நெல்லிக்காய்: நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது அதிக யூரிக் அமில அதிகரிப்புடன் தொடர்புடைய வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது சிறுநீரக செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

8/8
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.





Read More