PHOTOS

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அம்சங்கள், குவியும் ஆர்டர்கள்: அசத்தும் மின்சார பைக்

ார்களுடன், மின்சார இரு சக்கர வாகனங்களும் மின்சார வாகன சந்தையில் பிரபலமடைந்து வருகின்றன. ஸ்கூட்டர் மட்டுமின்றி தற்போது பல ம...

Advertisement
1/4
ஒரு பைக் பலரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது
ஒரு பைக் பலரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது

மின்சார பைக்குகளின் மார்க்கெட்டைப் பற்றி பேசினால், ஒரு பைக் பலரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த பைக்கின் அம்சங்கள் காரணமாக இது மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சிறப்பு பைக் கேளிக்கைக்கான பைக்காக பார்க்கப்படுகின்றது.

 

2/4
நிறுவனம் ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டது
நிறுவனம் ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டது

Wardwizard Innovations & Mobility Limited, அதன் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் இ-பைக்குகளை ’ஜாய் இ-பைக்’ பிராண்டின் கீழ் இந்தியாவில் விற்பனை செய்கிறது. நிறுவனம் சமீபத்தில் இரண்டாவது காலாண்டின் முடிவுகளை அறிவித்தது. அதில், 2021 அக்டோபரில் 2885 மின்சார பைக்குகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், கடந்த ஆண்டு 474 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

3/4
இந்த பைக்கில் உள்ள சிறப்பம்சம் என்ன?
இந்த பைக்கில் உள்ள சிறப்பம்சம் என்ன?

இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் பற்றி பேசினால், இதில் 250W மோட்டார் பவர் கொடுக்கப்பட்டுள்ளது. சார்ஜிங்கைப் பற்றி பேசினால், இந்த பைக் நான்கு முதல் நான்கரை மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யப்படுகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ. ஆகும். அதன் பேட்டரி திறன் 72V 23AH ஆகும். இந்த பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் இது 75 கிமீ வரை செல்லும். இந்த பைக்கின் விலை சுமார் 1,56,000 ரூபாய் ஆகும்.

4/4
இந்த பைக்குகளுடன் சந்தையில் போட்டியிடும்
இந்த பைக்குகளுடன் சந்தையில் போட்டியிடும்

மின்சார பைக் பிரிவில் இந்த வரம்பில் உள்ள மற்ற நிறுவனங்களின் பைக்குகளைப் பற்றி நாம் பேசினால், இந்த பைக் ஒடிஸி எலக்ட்ரிக் எவோகிஸுடன் போட்டியிடுகிறது. மறுபுறம், இந்த வரம்பில் உள்ள ஸ்கூட்டர்களை எடுத்துக்கொண்டால், இது சிம்பிள்-1 மற்றும் ஏதர் 450X ஆகியவற்றுக்கு நல்ல ஈடாக இருக்கும்.





Read More