PHOTOS

சிறுநீரக பிரச்சனையை ஏற்படுத்தும் ஆபத்தான் ‘சில’ உணவுகள்..!

்சியம், பாஸ்பரஸ், ஆக்ஸலேட், யூரிக் அமிலம் மற்றும் சிஸ்டின் போன்ற தாதுப்பொருட்கள் அதிகமாக இருக்கும். இவைதான் ச...

Advertisement
1/8
சிறுநீரகம்
சிறுநீரகம்

சிறுநீரகத்தின் செயல்பாடு உடலில் இருந்து கழிவு, நச்சுகளை அகற்றுவதாகும். இது தவிர சிறுநீரகம், உடலில் நீர்சத்து உள்ளிட்ட பிற திரவங்கள் மற்றும் உடலில் உள்ள தாது அளவுகள் குறையாமல் பார்த்துக் கொள்கிறது. இந்நிலையில் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால், அது உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.

2/8
இறைச்சி
இறைச்சி

இறைச்சி:  பதப்படுத்தப்பட்ட இறைச்சியை தொடர்ந்து அளவிற்கு அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்களை உருவாக்கும் வாய்ப்புகளை அதிக அளவில் அதிகரிக்கும். உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை வலுவாக வைத்திருக்க, அளவோடு உட்கொள்ளுங்கள்.

3/8
தக்காளி
தக்காளி

தக்காளி: தக்காளியை அதிகமாக உட்கொண்டால், தக்காளியில் காணப்படும் ஆக்சலேட் அதிக அளவில் உடலுக்குள் சென்றால், சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். நீங்கள் தக்காளி சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டியதில்லை.  ஆனால், நீங்கள் அதை வரம்பிற்குள் உட்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

4/8
குளிர் பானங்கள்
குளிர் பானங்கள்

குளிர் பானங்கள்:  இரசாயனங்கள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள குளிர் பானங்கள் குடிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, நீங்கள் குளிர் பானங்கள் குடிக்கக்கூடாது. 

5/8
காஃபின்
 காஃபின்

குளிர் பானங்கள் தவிர, காஃபின் சிறுநீரக கற்களின் அபாயத்தையும் அதிகரிக்கும். .அதிகப்படியான காஃபின் உட்கொள்ளல் கற்களின் அபாயத்தை அதிகரிக்கும். ஆகவே காபி, அல்லது கஃபைன் அதிகம் உள்ள பானகளை உட்கொள்ள வேண்டாம். குறைந்தபட்சம் இவற்றை குறைப்பது நல்லது. 

6/8
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு

தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு குடித்து வந்தால் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். இது சிறுநீரக கற்களின் அபாயத்தைக் குறைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். மேலும்,சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் அதிக தண்ணீர் குடிப்பது நன்மை தரும். இது இயற்கையான முறையில் கற்களை உடலை விட்டு அகற்ற உதவும்.  

7/8
சிறுநீரக கற்கள்
சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, சோடியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்களையும் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும் என்பதோடு. உங்களுக்கு சிறுநீரக கற்கள் பிரச்சனை இருந்தால், மருத்துவர் பரிந்துரைக்கும் டயட்டையும் பின்பற்ற வேண்டும்.

8/8
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)





Read More