PHOTOS

ராட்சனை மிஞ்சிவிட்டதா? அசோக் செல்வனுக்கு கேள்வி எழுப்பிய விஷ்ணு விஷால்

போர் தொழில் படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், விஷ்ணு விஷால் அடித்த கமெண்ட் வைரலாகியுள்ளது.

...
Advertisement
1/6

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான அசோக் செல்வன், தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்துள்ளார். 

 

2/6

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

3/6

அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். 'போர் தொழில்' திரைப்படம் கடந்த ஜூன் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

4/6

'போர் தொழில்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இப்படம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ராட்சசனை மிஞ்சிவிட்டதா? படம் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

 

5/6

இதற்கு பதிலளித்த அசோக் செல்வன், மச்சி.. அதற்கு பதில் சொல்லும் சிறந்த நபர் நீ தான்! நீயே பாத்துட்டு சொல்லு.. நன்றி டா, நீ எனக்காக மகிழ்ச்சியாக இருப்பாய் என்று எனக்கு தெரியும். வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

 

6/6

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் தமிழ் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 





Read More